மேலும் அறிய

Pattabiram Metro: அப்பாடா.! கோயம்பேட்டிலிருந்து பட்டாபிராமிற்கு இனி NO Traffic - மெட்ரோவுக்கு நிதி ஒதுக்கிய அரசு

சென்னை பட்டாபிராம் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, கோயம்பேட்டிலிருந்து வர உள்ள மெட்ரோ வழித்தடத்தை அமைப்பதற்கான நிதியை ஒதுக்கியது தமிழ்நாடு அரசு.

சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ வழித்தடத்தை அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது, அந்த வழித்தடத்தில் பயணிக்கும் மக்கள் பெரும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயில் சேவை

சென்னை என்றாலே, எங்கு திரும்பினாலும் டிராபிஃக் பிரச்னை இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அப்படி இருக்கும்போது, மெட்ரோ ரயில் வந்த பிறகு, அலுவலகம் செல்லும் பலருக்கு, அது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பொதுமக்களுக்கு விரைவான போக்குவரத்து சேவையும் கிடைக்கிறது. இதன் காரணமாக, மெட்ரோ ரயில் சேவை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ஆரம்பத்தில், மெட்ரோ ரயில் கட்டணம் அதிகம் என்ற சிந்தனை இருந்தபோதிலும், அலுப்பில்லாத ஏசி பயணம், விரைவான போக்குவரத்து ஆகியவற்றால், மக்களை மெட்ரோவை விரும்ப ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது இயக்கப்படும் மெட்ரோ வழித்தடங்கள்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தற்போது 2 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில், முதலாவது விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையும், இரண்டாவது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப் பணிகள், 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 118. 9 கிலோ மீட்டர் தொலைவிற்கு, 3 வழித்தடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புற வழிச்சாலை வரை, சுமார் 26. 1 கிலோ மீட்டர் தொலைவிற்கும், அதே போல், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையில் சுமார் 45.8 கிலோ மீட்டர் தொலைவிற்கும் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தொலைவிற்கு மற்றொரு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோயம்பேடு - பட்டாபிராம் வழித்தடம் - அரசு நிதி ஒதுக்கீடு

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான மெட்ரோ வழித்தடம் 9,928 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 21.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைய உள்ளது. 19 மெட்ரோ ரெயில் நிலையங்கள், 3 மேம்பால சாலைகளுடன் இந்த திட்டம் அமைய உள்ளது. இதற்கு மத்திய அரசும் தமிழக அரசும் ஏற்கனவே ஒப்புதல் தெரிவித்திருந்த நிலையில், அந்த வழித்தடத்தில் நிலம் கையப்படுத்துவதற்கான பணிகளை தொடங்குவதற்கு, தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் இதற்காக, 2,442 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இது, கோயம்பேடு - பட்டாபிராம் வழித்தடத்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடிய செய்தியாக அமைந்துள்ளது. பணிகளை விரைந்து முடித்து, மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை பேருந்து நடத்துனர் குத்தகை: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget