மேலும் அறிய
Healthy Foods : வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய அற்புதமான உணவுகள்!
Healthy Foods : முறையான உணவு பழக்கத்தை பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழலாம். சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

ஆரோக்கியமான உணவு
1/6

தேன் ஊற்றிய வெதுவெதுப்பான தண்ணீர் : தேனில் இருக்கும் வைட்டமின், மினரல்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அது மட்டுமல்லாமல் வயிற்றில் இருக்கும் தேவையற்ற கழிவுகளையும் நீக்க உதவலாம். சூடான தண்ணீரில் தேன் கலந்து சாப்பிடும் போது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்
2/6

ஊறவைத்த பாதாம் : பாதாமில் மெக்னீசியம், வைட்டமின் ஈ, ஒமேகா - 3 , 6, நார்ச்சத்து நிறைந்துள்ளது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த உணவு பாதாம். 100 கிராம் பாதாமில் 21 .15 கிராம் புரோட்டின் நிறைந்துள்ளது. இரவில் ஊறவைத்து தோலை நீக்கி சாப்பிடும் போது முழு பலனையும் பெற முடியும்.
3/6

பச்சை பயிறு : பச்சை பயிரை சமைத்து சாப்பிடுவதை விட, முலைவிட்ட பச்சை பயிரை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல பலனளிக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் கே, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலை பலமாகவும், கட்டு கோப்பாக வைக்கவும் நினைப்பவர்கள் இதை தினசரி காலையில் சாப்பிடலாம்.
4/6

பப்பாளி பழம்: வருடம் முழுவதும் கிடைக்கும் பப்பாளி பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது குடலில் உள்ள கழுவுள் நீங்கும், குடல் இயக்கத்தை சீராகும். மேலும் வயிற்று உப்புசம், மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கலாம்.
5/6

சியா விதைகள் : ஊறவைத்த சியா விதைகளில் புரோட்டின், நார்ச்சத்து, கால்சியம், ஒமேகா-3, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இரவில் ஊறவைத்த சியா விதைகளை பாலில் கலந்தோ, வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்தோ, ஜூஸின் மீது தூவியோ குடிக்கலாம்.
6/6

பழைய சோறு : சாதாரண சாதத்தை விட இரவில் தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்ட பழைய சாதத்தில் சத்துக்கள் அதிகம் உள்ளது என கூறப்படுகிறது. பழைய சாதத்தில் இருக்கும் ப்ரோபயாட்டிக் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
Published at : 11 Jun 2024 12:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement