Watch Video: அழகா இருக்கு! சிவப்பு வேலியுடன் காதல்! ஆச்சரியமளித்த அமெரிக்க பெண்ணின் லவ் ஸ்டோரி!
கடந்த 2007ஆம் ஆண்டு எரிகா என்ற பெண் ஈஃபில் டவரை திருமணம் செய்து பிரபலம் அடைந்தார்.
அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 2007ஆம் ஆண்டு ஈஃபில் டவரை திருமணம் செய்து கொண்ட பிரபலம் அடைந்தார். தற்போது மீண்டும் அவர் ஒரு வீடியோ மூலம் வெளிசத்திற்கு வந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறிய கருத்துகளின் மூலம் அவர் வைரலாகி வருகிறார்.
அந்த வீடியோவில் அப்பெண், “இங்கு இப்படி ஒரு வேலி(fence) இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது சிறப்பாக அமைந்துள்ளது. எப்போதும் எனக்கு வேலி பிடிக்காது. அது சற்று ஆபத்தான ஒன்று என்று நான் கருதுவது உண்டு. ஆனால் இதுபோன்ற ஒரு சிறப்பான வேலியை பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த வேலி தற்போது என்னுடைய கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் உடலளவில் நான் இந்த வேலியுடன் ஒன்றாக இணைந்துள்ளேன். இந்த வேலி தொடர்பாக இன்னும் சற்று தெரிந்து கொள்ள அவலாக உள்ளேன் ” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த எரிகா லாப்ரி கடந்த 2007ஆம் ஆண்டு பாரீஸிலுள்ள ஈஃபில் டவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். அந்தத் திருமணத்திற்கு பிறகு அவருடைய பெயரை எரிகா ஈஃபில் என்று மாற்றிக் கொண்டார். 50 வயதாகும் இந்தப் பெண் ஒரு வில்வித்தை வீராங்கனையாகவும் உள்ளார். இவருக்கு உயிரில்லாத பொருட்கள் மீது அதிக நாட்டம் மற்றும் ஈர்ப்பு இருந்து வருகிறது. அந்தவகையில் தற்போது இவர் தனக்கு ஒரு சிவப்பு வேலி பிடித்துள்ளது என்று கூறி மீண்டும் பேசுப் பொருளாக மாறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இதுபோன்ற பொருட்கள் மீதான ஈர்ப்பு தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சாரா ரோடோ போயிங் 737 விமானத்தின் மீது அதிக ஈர்ப்பு மற்றும் நாட்டம் வைத்திருந்தாக செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து கடந்த ஒரு நபர் தன்னுடைய காருடன் நீண்ட நாட்கள் பாலியல் உறவு வைத்திருப்பதாக கூறிய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில் தற்போது எரிகாவின் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ டிக்டாக் தளத்தில் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்