எங்களுக்கு திருமணமாகி சில வருஷமாச்சு...பகீர் கிளப்பிய மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் மனைவி
மாதம்பட்டி ரங்காஜூக்கும் தனக்கு திருமணமாகி சில வருடங்கள் கடந்துவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி கிளப்பியுள்ளார்

பகீர் கிளம்பிய ஜாய் கிரிஸில்டா
சமலை கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு சமூக வலைதளத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மேலும் தான் 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் வெளியிட்ட புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கையில் அவருடன் விவாகரத்து கூட பெறாமல் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்துகொண்டது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் மனைவி ஜாய் கிரிஸில்டாவின் இன்ஸ்டாகிராம் பதிவு அதிர்ச்சியளித்துள்ளது
திருமணமாகி சில வருஷமாச்சு
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜூக்கு தனக்கும் திருமணமாகி சில வருடங்கள் கடந்துள்ளதாகவும் இந்த வருடம் தங்கள் குழந்தையை வரவேற்க காத்திருப்பதாகவும் கூறியுள்ளார் " சில உறவுகள் அமைதியாக தொடங்கினாலும் வளர வளர நம்பிக்கை பெருகும். அந்த வகையில் நானும் மாதம்பட்டி ரங்கராஜூம் சில வருடங்கள் முன்பு முழுமனதோடும் , பரஸ்பர மரியாதையோடும் எங்கள் திருமண வாழ்க்கையைத் தொடங்கினோம். மிகுந்த அன்போடும் நன்றியுணர்வோடும் எங்கள் முதல் குழந்தையை இந்த ஆண்டு வரவேற்க காத்திருக்கிறோம்" என அவர் பதிவிட்டுள்ளார்
Hello all 🙏🏻#madhampattyrangaraj #chefmadhampattyrangaraj #MrandMrsRangaraj pic.twitter.com/oOVSQIEiSf
— Joy Crizildaa (@joy_stylist) July 30, 2025
மாதம்பட்டி ரங்கராஜூக்கும் ஜாய் கிரிஸில்டாவுக்கும் திருமணமாகி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் மாதம்பட்டி ரங்கராஜை பழிவாங்க ஜாய் அடிக்கடி இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது திருமணம் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் , அவரது முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது





















