Hike To Notice Employees : வேலையை விட்ற ப்ளானா? ஓக்கே போங்க.. 10% சம்பள உயர்வு : அடடே போட வைத்த இந்த கம்பெனி!
கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு நோட்டீஸ் ப்ரியட் என்பது பழக்கப்பட்ட வார்த்தைதான். வேலை பார்க்கும் ஊழியர் அந்த வேலையைவிட்டு போகவேண்டும் என்றால் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும்
உலகம் முழுவதும் எத்தனையோ நிறுவனங்கள் இயங்கி வந்தாலும் அவ்வப்போது சில நிறுவனங்களின் செயல்பாடுகள் அனைவரையும் கவனிக்க வைக்கும். குஜராத் தொழிலதிபர் ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக கார் கொடுத்ததை இந்தியாவே வாயை பிளந்து பார்த்தது. வழக்கமான சலுகைகள் இல்லாமல் ஊழியர்களுக்கு கொடுக்கும் சில பிரத்யேக சலுகைகள் உலகம் முழுவதும்கூட ட்ரெண்டாகிவிடும். அப்படியான ஒரு சலுகைதான் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.
நோட்டீஸ் ப்ரீயட்:
கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு நோட்டீஸ் ப்ரியட் என்பது பழக்கப்பட்ட வார்த்தைதான். ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் அந்த வேலையைவிட்டு போகவேண்டும் என்றால் முன்கூட்டியே நிறுவனத்திடம் சொல்லிவிட வேண்டும். அது ஒரு மாதம், 3 மாதம் என நிறுவனத்துக்கு நிறுவனம், ஊழியரின் பதவியை பொறுத்து மாறுபடும். அந்த ஊழியரின் இடத்துக்கு இன்னொரு நபரை வேலைக்கு அமர்த்த தேவையான நேரத்தை பெறவே இந்த நோட்டீஸ் ப்ரீயட் என்ற முறையை நிறுவனங்கள் கையாள்கின்றன. இந்த நோட்டீஸ் பிரியட் என்பது பெரும்பாலும் நிறுவனத்துக்கு சாதகமாகவே இருக்கும். சில நிறுவனங்கள் ஊழியரின் சம்பளத்தை வழக்கம்போல் கொடுப்பார்கள். சில நிறுவனங்கள் காலம்தாழ்த்தி கம்பெனி விதிமுறைகளின்படி கொடுப்பார்கள். இப்படியாக நோட்டீஸ் ப்ரீயடில் இருக்கும் நபருக்கு சம்பளமே தத்தி தத்திதான் செல்லும் என்ற நிலையில் அமெரிக்காவில் ஒரு நிறுவனம் நோட்டீஸ் ப்ரீயடில் இருக்கும் ஊழியர்களுக்கு அதிக சம்பளத்தை கொடுத்து அனுப்பி வைக்கிறது.
அமெரிக்க கம்பெனி:
அமெரிக்காவைச் சேர்ந்த கொரில்லா என்ற மார்க்கெட்டி ஏஜென்சி நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு இப்படியான அடடே ஆபரை கொடுத்துள்ளது. அதாவது அங்கு பணியாற்றும் ஊழியர் வேலையை விட்டு போக முடிவெடுத்து நோட்டீஸ் ப்ரியடில் இருந்தால் அவருக்கு 10% சம்பள உயர்வு கொடுக்கிறது. பணியாற்றும் நிறுவனத்துடன் சினேகத்துடனே ஊழியர்கள் வெளியேற வேண்டுமென்றும், இந்த சம்பள உயர்வு ஒரு நல்ல உணர்வை ஊழியர்களிடத்தில் உருவாக்கும் எனவும் அந்நிறுவனம் கருதுகிறது.
முன்னேற்றத்துக்கு..
இதுகுறித்து பேசிய கொரில்லா நிறுவனத்தின் நிறுவனர் ஜான் ப்ரான்கோ, '' ஊழியர்கள் யாராவது வேறு வேலைக்காக வேண்டியோ, வேறு சில காரணங்களுக்காகவோ வேலையை விடுவதாக சொல்வார்கள். அவர்களுக்கு நாங்கள் 10% சம்பள உயர்வு கொடுத்து 3 மாத நோட்டீஸ் ப்ரியட் கொடுக்கிறோம். ஒருவேலை இந்த இடம் நமக்கு செட்டாகவில்லை என ஊழியர்கள் நினைத்தாலோ, அல்லது அவர்களின் முன்னேற்றத்துக்கான நடவடிக்கை என்றோலோதான் அவர்கள் வேலையை விட்டு போகிறார்கள். அப்படி என்றால் எங்களை நாங்களே சுய பரிசோதனை செய்துகொள்கிறோம்.
தவறுகளை திருத்துகிறோம். அதேவேளையில் சம்பள உயர்வு கொடுத்து ஊழியர்களை வெளியே அனுப்புவது தவறான அணுகுமுறை அல்ல. நிச்சயமாக எங்கள் ஊழியர்கள் வெளியேறுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் அனைவருமே எங்களுடன் காலம்முழுவதும் இருக்க வேண்டும் என நினைத்தால் அது முட்டாள்தனம். அனைவரும் முன்னேற்றத்தை நோக்கியே படையெடுக்கிறார்கள். அதனை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
நீல திமிங்கலங்களை பாதுகாக்க கடல்வழியை மாற்றியமைத்த கப்பல் நிறுவனம்.. இதுதான் விவரம்..