மேலும் அறிய
மதுரையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மதுரையில் முதியவர் கைது
Source : whats app
மதுரையில் 9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொந்தரவு அளித்த முதியவர்
மதுரையை சேர்ந்த 9 வயது பள்ளி மாணவி நேற்று தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு மதுரையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற 51 வயது முதியவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் பதறிய சிறுமி முதியவர் குறித்து தனது தந்தை மற்றும் உறவினரிடம் கூறியுள்ளார். மேலும் உறவினர்களிடம் பேசிய சிறுமி ஏற்கனவே 7 வயதில் இருந்தபோதும், ஹரிகிருஷ்ணன் என்ற இந்த முதியவர் தன்னை பாலியல் தொந்தரவு அளித்தார் என கூறியுள்ளார்.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் முதியவர் ஹரிகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















