காஞ்சிபுரம் மாணவர்கள் சாதனை! மீனவர்களுக்காக பாதுகாப்பு பெல்ட், ஆசிரியருக்காக தொப்பி: ஆட்சியரின் பாராட்டு!
காஞ்சிபுரம் அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து சாதித்துள்ளனர்.

மீனவர்கள் மற்றும் ஆசிரியருக்காக காஞ்சியில் கண்டுபிடிக்கபட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்
அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகள்
SDPI 3.0 பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாணவர்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனம் சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட 725 அணிகளுக்குள் 153 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரு பள்ளிகள் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்தியுள்ளது. முசரவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், கடலில் பயணம் செல்லும் மீனவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு பெல்ட் உருவாக்கி அதனை காட்சிப்படுத்தினர்.
இந்த பெல்ட் அணிவதன் மூலம் நீரில் மூழ்கும் நிலை ஏற்படும் போது அந்த பெல்ட்டினை ரிலீப் செய்யும் போது மேலே வரும் வகையில் அதன் செயல்பாடு இருப்பதால் இது பெரிதும் விபத்துக்களை தவிர்க்க உதவும் என்பதும் , அணிய எளிய எளிதான ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது இதற்காக ஒரு லட்ச ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சிறுகளத்தூர் பள்ளியில் பயிற்றுவிக்கும் பார்வையற்ற ஆசிரியர் சந்திக்கும் பிரச்சனைகளை கண்ட மாணவர்கள் அவர்களுக்கு உதவும் வகையில் தலையில் அணியும் தொப்பி மூலம் எதிரில் உள்ள பொருட்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டுதலுக்கு உதவும் வகையில் அதில் உள்ள சென்சார் மூலம் அது குறித்த செய்திகள் உரையாடலாக தெரிவிக்கும் வகையில் இதனை உருவாக்கியுள்ளனர். இது எங்களின் ஆசிரியருக்காக உருவாக்கப்பட்டது என்பதும் பெருமை கொள்வதாக அம்மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
வாழ்த்திய மாவட்ட ஆட்சியர்
இந்த இரு பள்ளிகளின் சேர்ந்த மாணவ மாணவிகள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சந்தித்து பரிசு பெற்றதை அவரிடம் தெரிவித்து அவர்களின் வாழ்த்துக்களையும் பெற்றார்.
சிறுவயதிலேயே அனைவரின் துயரங்களை அறிந்து அதற்காக தங்களது, ஆராய்ச்சி மேற்கொள்ளும் இந்த இளம் வயது மாணவர்களை பெரிதும் பாராட்டுவோம். இவையெல்லாம் சென்சார்களை செய்யப்படும் பயன்படுத்தி, ஆரம்ப கால சோதனை அடிப்படையில் நடைபெறும் கண்டுபிடிப்பு என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் அறிவியலை பழக பழகவே கற்றுக் கொள்ள முடியும், சிறுவயதிலேயே அறிவியலை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் இந்த மாணவர்களை மீண்டும் ஒருமுறை பாராட்டுவோம்.





















