ட்விட்டர் வேண்டாம்.. ஒப்பந்தம் ரத்து! பின்வாங்கிய எலான் மஸ்க்!
சமூக வலைதளமான டிவிட்டரை 44 மில்லியன் டாலருக்கு வாங்குவதாக இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தை மீறியதாக எலான் மீது வழக்கு போட டிவிட்டர் முடிவு செய்துள்ளது.
சமூக வலைதளமான டிவிட்டரை 44 மில்லியன் டாலருக்கு வாங்குவதாக இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தை மீறியதாக எலான் மஸ்க் மீது வழக்கு போட டிவிட்டர் முடிவு செய்துள்ளது.
உலகின் முன்னனி பணக்காரராரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மாஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் டிவிட்டரினை மொத்தமாக வாங்குவதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப் படுத்தும் விதமாக எலான் மஸ்க்கும் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டரை வாங்குவதாக தெரிவித்திருந்தார். இந்த தகவலை எலான் மஸ்க் தெரிவித்ததும், உலகம் முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து டிவிட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் தயார் செய்யப்பட்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, 44 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது டிவிட்டர் கணக்குகள் மற்றும் அதன் ஷேர்கள் எலான் மஸ்க்கிற்கு மாற்றப்பட்டு வருகிற பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் தான், டிவிட்டர் நிர்வாகத்தின் மீது கோபம் கொண்ட எலான் மஸ்க், டிவிட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தத்தினை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார்.
தற்போது, எலான் மஸ்க், டிவிட்டரை வாங்குவதற்கான ஒப்பந்ததை ரத்து செய்வதற்கான காரணமாக எலான் மஸ்க் தரப்பினர் கூறுவது, டிவிட்டரில் உள்ள போலி கணக்குகள் மற்றும் தொடர்ந்து செயல்படாமல் இருக்கக்கூடிய கணக்குகள் பற்றிய விபரங்களை, ஒப்படைக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், டிவிட்டர் நிர்வாகம் இது குறித்து எந்த விதமான தகவலையும் வழங்கவில்லை. மேலும் டிவிட்டர் தெரிவித்திருந்ததை விட 4 மடங்கு அதிகமான போலி கணக்குகள் உள்ளதாகவும், இதனால் லாபமற்ற டிவிட்டரை வாங்கி பயனற்றது என எலான் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிவிட்டரின் நடவடிக்கையினால் மிகவும் எரிச்சல் அடைந்த எலான் மஸ்க், தற்போது டிவிட்டரை வாங்குவதற்கான 44 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தினை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தம் ரத்து செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ள இந்த தகவலால் டிவிட்டர் நிர்வாகம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஒப்பந்தத்தினை மீறியதாக எலான் மஸ்க் மீது டிவிட்டர் நிர்வாகம் வழக்கு போடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியோடு பரபரப்பான பேசு பொருளாகவும் மாறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்