மறைக்கப்பட்ட வரலாறா ? திருடப்பட்ட வரலாறா ? ரிலீஸூக்கு முன்பே திரெளபதி 2 படத்தை வச்சு செய்யும் ரசிகர்கள்
மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் திரெளபதி 2 படத்தை ரிலீஸுக்கு முன்பே ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள்

மோகன் ஜி
பழைய வண்ணாரபேட்டை , திரெளபதி , பகாசூரன் ஆகிய படங்களை இயக்கி தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் இயக்குநர் மோகன் ஜி. ஒருபக்கம் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அரசியல் கருத்துக்களை தங்கள் படங்களில் பேசிவரும் நிலையில் அவர்களின் கருத்திற்கு நேர் மாறான அரசியலை தனது படங்களில் பேசி வருகிறார்.
ரிலீஸுக்கு முன்பே ட்ரோல் செய்யப்படும் திரெளபதி 2
அந்த வகையில் தற்போது தனது அடுத்த படமாக திரெளபதி 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோகன் ஜி. திரெளபதி படத்தில் நடித்த ரிச்சர்ட் ரிஷி இந்த படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். 14 ஆம் நூற்றாண்டில் மறைக்கப்பட்ட போசளர்களின் செந்நீர் சரிதம் என இந்த போஸ்டரில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்றை மோகன் ஜி பகிர்ந்துள்ளார். " இந்த ஆண்டு இறுதியில் திரையில் வெளியாகும்.. மறைக்கப்பட்ட நம் முன்னோர்கள் வரலாற்றை பதிவு செய்திருக்கிறோம் " மோகன் ஜி பதிவிட்டிருந்தார்.
#திரெளபதி2 படப்பிடிப்பு தளத்தில்.. இந்த ஆண்டு இறுதியில் திரையில் வெளியாகும்.. மறைக்கப்பட்ட நம் முன்னோர்கள் வரலாற்றை பதிவு செய்திருக்கிறோம் 🔥 pic.twitter.com/cwhqUGlAfy
— Mohan G Kshatriyan (@mohandreamer) June 16, 2025
இந்த பதிவின் கீழ் நெட்டிசன்கள் திரெளபதி 2 படத்தை ட்ரோல் செய்யும் விதமாக பல கருத்துக்களை கமெண்ட் செய்து வருகிறார்கள்.
" இது மறைக்கப்பட்ட வரலாறா இல்லை திருடப்பட்ட வரலாறா ' என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் ' மறைக்கப்பட்ட வரலாறு உங்களுக்கு எப்படி தெரியும்" என கேட்டுள்ளார்.
"அப்படியே மறைக்கப்பட்ட உங்கள் முன்னோர்கள் மரம் வெட்டியது குடிசை கொளுத்தியது ஆவண கொலை செய்தது அதையும் காட்டுங்க ஜி" என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.






















