TN 10th Result Centums: அறிவியல் & சமூக அறிவியலில் ஃபயர் - தமிழ் எப்படி? 10ம் வகுப்பு பொதுத்தேர்வு - 100க்கு 100 விவரம்
Tamil Nadu 10th Result 2025 Centum Scorers:10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 10 ஆயிரத்து 838 பேர் நூற்றுக்கு நூறு எடுத்து மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

Tamil Nadu 10th Result 2025 Centum Scorers: 10ம் வகுப்புபொதுத்தேர்வு முடிவில் 9.80 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:
பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி, தேர்வு எழுதியவர்களில் 93.8 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.55 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் அது 2.25 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்கள் 91.74 சதவிகிதம் பேரும், மாணவிகள் 95.88 சதவிகிதம் பேரும் அடங்குவர். இதில் 5 பாடங்களிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை குவித்துள்ளனர்.
100க்கு 100 மதிப்பெண்கள்:
5 பாடங்களிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 23 ஆயிரத்து 444 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதில் அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 10 ஆயிரத்து 838 பேரும், சமூக அறிவியலில் 10 ஆயிரத்து 256 பேரும் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக தாய்மொழியான தமிழ் பாடத்தில் 8 பேர் மட்டுமே சதம் விளாசியுள்ளனர்.
| வ. எண் | பாடங்கள் | தேர்ச்சி விகிதம் (%) | 100-க்கு 100 மதிப்பெண் எடுத்தவர்கள் |
| 1 | தமிழ் | 98.09 | 8 |
| 2 | ஆங்கிலம் | 99.46 | 346 |
| 3 | கணிதம் | 96.57 | 1996 |
| 4 | அறிவியல் | 97.90 | 10838 |
| 5 | சமூக அறிவியல் | 98.49 | 10256 |
பாடங்களில் தேர்ச்சி விகிதம்:
பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணிதத்தில் குறைந்தபட்சமாக 95.67 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக ஆங்கிலத்தில் 99.46 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 98.09 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள்:
- தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 12,290, தேர்ச்சி பெற்றோர் 11,409 (92.83%).
- தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 237, தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 230.(97.05%).
- தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் எண்ணிக்கை 23,769, தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 9,616 (40.46%).
தேர்ச்சி பெற தகுதியானவர்கள் உடனடியாக துணைத்தேர்வு எழுதி, நடப்பு கல்வியாண்டிலேயே 11ம் வகுப்பில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை அறிய மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளை அணுகலாம்.





















