மேலும் அறிய

TN 10th Result 2025: வெளியானது 10 ஆம் வகுப்பு முடிவுகள்... சாதித்துக்காட்டிய மாணவ மாணவிகள்.. முழுவிவரம்

Tamil Nadu 10th Result 2025: 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்

2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 தொடங்கி 28 ஆம் தேதி நிறைவு பெற்றன.

தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி அன்று தொடங்கி நடைபெற்றது.  பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இதுமட்டுமில்லாமல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளும் இன்று ம்தியம் 2 மணிக்கு வெளியாகவுள்ளது.

வெளியான முடிவுகள்:

இதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வெளியாகியுள்ளது, இதில் 93.80 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 4,17, 183 பேரும், மாணவர்கள் 4,00,078 தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட 4.14 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி விவரங்கள்:

  • தேர்ச்சி பெற்றவர்கள் : 8,17,261 (93.80%)
  • மாணவியர் 4,17,183 (95.88%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
  • மாணவர்கள் 4,00,078 (91.74%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
  • மாணவர்களை விட 4.14 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 15,652.
  • கடந்த மார்ச் / ஏப்ரல் 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,94,264. தேர்ச்சி பெற்றோர் 8,18,743 தேர்ச்சி சதவிகிதம் 91.55%.
  • கடந்த மார்ச் / ஏப்ரல் 2024 பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 2.05% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.

டாப் 5 மாவட்டங்கள்:

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் அதிக தேர்ச்சி பெற்ற  டாப் 5 மாவட்டங்கள்

1.சிவகங்கை - 97.49%

2.விருதுநகர் - 95.57%

3.கன்னியாகுமரி - 95.47%

4.திருச்சி - 95.42%

5.தூத்துக்குடி - 95.40%

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

மாணவர்கள் தங்களின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம். தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகியவற்றை வைத்து உங்கள் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்

மேலும் results.digilocker.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தேர்வர்கள்‌ தேர்வு முடிவுகளைப் பெறலாம்.

பள்ளிகளில் பார்க்கலாம்

மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்றும் அறிந்துகொள்ளலலாம்.

குறுஞ்செய்தி வழியாகவும் காண முடியும்…

மாணவர்கள்‌ தங்களின் பள்ளிகளில்‌ சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில்‌ குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள்‌ அனுப்ப்பட்டுள்ளது

தனித் தேர்வர்களுக்கு எப்படி?

தனித் தேர்வர்களுக்கு ஆன்‌லைனில்‌ விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கு, குறுஞ்செய்தி வழியாக‌ தேர்வு முடிவுகள்‌ அனுப்பப்படும்‌ என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 91.55% பேர் தேர்ச்சி 

முன்னதாக மாநிலக் கல்வி வாரியத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில்  பத்தாம்‌ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்‌ தேர்வு முடிவுகள்‌ மே 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 91.55% பேர் தேர்ச்சி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

துணை தேர்வுகள் எப்போது? 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணக்கர்களுக்கு வரும் ஜூலை 4 ஆம் தேதி துணைத்தேர்வுகள்நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

53 விநாடிகளில் 100 உயிரினங்கள்! 2-ம் வகுப்பு மாணவர் ஆதித்யாவின் அபார நினைவாற்றல் - புதுச்சேரியில் வியக்க வைத்த சாதனை முயற்சி!
53 விநாடிகளில் 100 உயிரினங்கள்! 2-ம் வகுப்பு மாணவர் ஆதித்யாவின் அபார நினைவாற்றல் - புதுச்சேரியில் வியக்க வைத்த சாதனை முயற்சி!
School Teacher: பள்ளி ஆசிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! டிசம்பர் 11 கடைசி நாள்!
School Teacher: பள்ளி ஆசிரியர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு! டிசம்பர் 11 கடைசி நாள்!
"காலத்தையும் பணத்தையும் வீணடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்" - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
"வதந்திகளை நம்பாதீங்க மாணவர்களே" - அம்பேத்கர் உயர்கல்வி உதவித்தொகை குறித்த அரசின் முக்கிய அறிவிப்பு

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!
தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!
திருவிழா தொடங்கியது! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம்.. பக்தர்கள் பரவசம்!
திருவிழா தொடங்கியது! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம்.. பக்தர்கள் பரவசம்!
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
IND vs NZ: மீண்டும் சொதப்பிய இந்திய பேட்டிங்.. ரோ-கோ-க்கு என்னாச்சு? கம்பேக் கட்டாயம் பாய்ஸ்
IND vs NZ: மீண்டும் சொதப்பிய இந்திய பேட்டிங்.. ரோ-கோ-க்கு என்னாச்சு? கம்பேக் கட்டாயம் பாய்ஸ்
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ நிலவரம்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ நிலவரம்!
TN Weather News: வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
Tasmac Case: ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
Embed widget