Kubera First Review : நடிப்பில் ஆமிர் கானுக்கே கிளாஸ் எடுக்கும் தனுஷ்...குபேரா பட முதல் விமர்சனம் இதோ
Kubera First Review : தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா படத்தின் முதல் விமர்சனம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது

குபேரா
ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நாயகனாக நடித்து வெளியாக இருக்கும் படம் குபேரா. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தனுஷ் , நாகர்ஜூனா , ராஷ்மிகா மந்தனா , ஜின் சார்ப் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
வரும் ஜூன் 20 ஆம் தேதி தமிழ் , இந்தி , தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. குபேரா பட டீசர் சமீபத்தில் வெளியாகி வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது, கமர்சியல் கதாபாத்திரங்களில் நடித்து வந்த தனுஷ் இந்த படத்தில் பிச்சைக்காரனாக நடித்துள்ளது படத்தின் மீது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. பணத்தை மையமாக வைத்து நகரும் இந்த படம் தனுஷ் நடிப்பிற்கு தீனி போடும் கதையம்சமாக அமைந்துள்ளது என தனுஷ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
குபேரா முதல் விமர்சனம்
குபேரா படத்தின் முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழில் படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இல்லை என்றாலும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. குபேரா படத்தின் முதல் விமர்சனத்தை உமையர் சந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
குபேரா ஒரு டாப் நாட்ச் கிரைம் த்ரில்லர் படம். நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். க்ளைமேக்ஸ் காட்சிதான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நடிப்பில் எப்படி வித்தியாசம் காட்ட வேண்டும் என ஆமிர் கான் தனுஷிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்" என அவர் பதிவிட்டுள்ளார்
First Review #Kuberaa : A Powerful Crime thriller with Top Notch Performances by #Nagarjuna , #Dhanush & #RashmikaMandanna. Engaging Story & Climax is the USP of movie. #AamirKhan should learn versatile performance from Dhanush 😂😛. Go for it !
— Umair Sandhu (@UmairSandu) June 17, 2025
3.5⭐️/5⭐️ pic.twitter.com/htwT7CFIjw
குபேரா படத்திற்கு சென்சார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் 1 நிமிடங்கள்.




















