வாங்க மோடி, வரேன் டிரம்ப்.! அன்பு மட்டுமல்ல அலர்ட்டாக இருந்த 2 தலைவர்கள்: டாப் 5 முடிவுகள்..
Trump Modi Meeting: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி நேரில் சந்தித்தது, இரு நாடுகளின் உறவுக்கான மேப்பாக இருந்திருக்கிறது. அப்போது, எதிரிகளை விட கூட்டாளிகள் மோசமானவர்கள் என டிரம்ப் கூறினார்.

அதிபராக அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்பு, முதல் முறையாக இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சந்திப்பானது நிகழ்ந்திருக்கிறது. இது, நீண்டகால நண்பரை பார்த்தது மட்டும் என்ற நிகழ்வாக இருக்க வாய்ப்பில்லை, அமெரிக்க - இந்திய அரசின் உறவில் ஒரு புது போக்கை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், இந்திய பிரதமர் மோடியின் முதல் சந்திப்பு என்பதால், இவர்களது ஆட்சி காலத்தில் எவ்வாறு கொள்கைகள் இருக்க போகிறது, என்பதற்கான அடித்தளமாகவே, இந்த சந்திப்பு இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில், இருவரின் சந்திப்பில் என்ன முக்கிய முடிவுகள் குறித்து பேசினர் என பார்ப்போம்.
டிரம்ப்பை சந்தித்த மோடி:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரி 20 ஆம் தேதி, 2வது முறையாக பதவியேற்றார். அப்போது, இந்திய அரசு சார்பில், வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். விழாவில், அவருக்கு முன் வரிசையிலும் இடம் கொடுக்கப்பட்டது. ஆனால், சீன அதிபர் , இத்தாலி உள்ளிட்ட 7 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், நெருங்கிய நண்பர் பிரதமர் மோடிக்கு , டிரம்ப் அழைப்பு விடுக்கவில்லை என்ற பேச்சுகளும் அடிபட்டன.
இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க டிரம்ப் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், 2 நாள் அமெரிக்க பயணமாக, நேற்று சென்றடைந்தார். இந்நிலையில் இன்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்தார்.
President Donald J. Trump welcomed Indian Prime Minister @NarendraModi to the White House today. 🇺🇸🇮🇳 pic.twitter.com/4UB23j7UvK
— The White House (@WhiteHouse) February 13, 2025
அப்போது, இருவரும் நீண்ட கால நண்பராக இருந்தாலும், டிரம்பிற்காக தேர்தலில் , இந்திய மக்களிடம் பேசவில்லை என்ற கோபம் டிரம்பிற்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகத்தான் , பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவில்லை என்ற பேச்சுகளும் அடிபட்டன.
இருவரது பேச்சுக்களின் போது, இருந்தாட்டு உறவுகள் குறித்தும், அமெரிக்க இந்தியர்கள் குறித்தும், வரி விதிப்பு குறித்தும், ராணுவ தளவாடங்கள் வாங்குவது குறித்தும் பேசப்படிருக்கின்றன். மோடியை பார்த்ததும், அன்புடன் வரவேற்றார் டிரம்ப். இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர். ஆனால், அன்பு மட்டுமல்ல, நட்பு ஒருபக்கம் இருக்கட்டும் என்று, இருவரும் எச்சரிக்கையுடன் இரு நாட்டு உறவுகள் குறித்தும் பேசியிருக்கின்றனர்.
டாப் 5 முடிவுகள்:
இதையடுத்து, பிரதமர் மோடியும், டொனால்டு டிரம்ப்பும் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஆவணங்களின்றி இருக்கும் இந்தியர்கள்:
செய்தியாளர்களிடம் மோடி தெரிவிக்கையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருக்கும் இந்தியர்களை அழைத்துக் கொள்வதில் இந்தியா தயாராக உள்ளது. இந்தியர்கள் சிலர் , அவர்கள் அமெரிக்காவிற்குத்தான் வருகிறோம் என்றும் சிலரால் ஏமாற்றப்பட்டு அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
வரி:
அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், வரி விதிப்பு தொடர்பாக சில நாடுகள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இந்தியாவுக்கென, தனியாக வரி விதிப்புகளை விதிக்கவில்லை . இந்நிலையில், இந்தியா எந்தளவு வரி விதிக்கிறதோ , அந்தளவு வரி விதிப்போம் என சூசமாக செயதியாளர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.
எரிபொருள்:
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் தேவையானது இருக்கிறது. அமெரிக்காவிடம் , கச்சா எண்ணெய் அதிகமாகவே இருக்கிறது. இந்தியா, நம்மிடம் கச்சா எண்ணெய் வாங்க உள்ளது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
ஏற்றுமதி-இறக்குமதி:
இந்திய - அமெரிக்க வர்த்தகத்தில் டாலர் மதிப்பீட்டில் பார்க்கும் போது, இந்தியா அதிக அளவு ஆதயம் அடைகிறது என்று அமெரிக்க கூறுகிறது. இந்நிலையில் , இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்களை விற்க உள்ளோம்; எஃப் 35 ரக போர் விமானங்களையும் , இந்தியாவுக்கு வழங்க உள்ளோம் என டிரம்ப் தெரிவித்தார்.
தஹாவூர் ராணாவை ஒப்படைக்க முடிவு
மேலும், இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாத தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த தஹாவூர் ராணாவை , இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளோம் எனவும் டிரம்ப் தெரிவித்தார். மேலும், டிரம்ப் தெரிவிக்கையில், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்க வேண்டும்; அதே போல இந்தியாவையும் சிறந்த நாடாக்க வேண்டும், இரண்டு மக்களாட்சி நாடு ஒன்றும் சேரும் போது மிகச் சிறந்த மெகா கூட்டாண்மையை உருவாக்கும் என தெரிவித்தார்.
Addressing the press meet with @POTUS @realDonaldTrump. https://t.co/u9a3p0nTKf
— Narendra Modi (@narendramodi) February 13, 2025
எச்சரிக்கையாக இருந்த டிரம்ப் - மோடி:
இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் , கடந்த கால ஆட்சியில் மிக நெருக்கமான நட்புறவை கொண்டிருந்தனர். ஆனால், இந்த முறை அந்தளவு நெருக்கமான நட்பு தொடருமா என்றால் வருங்காலங்களில்தான் தெரியவரும்.
ஆனால், இருவரும் பல ஒப்பந்தளில் மற்றும் பேச்சுவார்த்தையில் எச்சரிக்கையாக இருந்துள்ளனர். எதிரிகளை விட கூட்டாளிகள் மோசமானவர்கள் என்று கூறியிருக்கிறார். இந்தியா எவ்வளவு வரி விதிக்கிறதோ, அந்தளவு வரிவிதிப்போம் என தெரிவித்திருக்கிறார் அதிபர் டிரம்ப். பிரதமர் மோடியும், முதல் முறை பேச்சுவார்த்தை, வருங்கால ஆட்சிக்கான மேப்பாக இருக்கும் என்பதால் எச்சரிக்கையாக , நெருடல்கள் வந்துவிடக் கூடாது என்றும், இந்தியா பொருளாதாரத்தை மனதில் வைத்தும் மோடி பேசியிருக்கிறார்.
இந்த சந்திப்பிலிருந்து, இந்தியாவை கச்சா எண்ணெய் , ராணுவ தளவாடங்களை வாங்க வைப்பதில் தீவிராமாக டிரம்ப் இருப்பதையும், அமெரிக்காவை விட, இந்தியா அதிக ஏற்றுமதி வர்த்தகத்தை கொண்டிருப்பதால் , இந்தியா மீது, அமெரிக்கா அதிக வரி விதிப்பை மேற்கொண்டுவிடக்கூடாது என்பதிலும் இருவரும் அலர்ட்டாக இருப்பதை உணர முடிந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

