Sunita Williams: இந்த முறை மிஸ் ஆகல..! சீறிப்பாய்ந்த ஸ்பேஸ்X ராக்கெட், சரியா 4.33 மணி, பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams: சர்வதே விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதற்கு ஏற்ப, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

Sunita Williams: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததன் மூலம், அடுத்த வார இறுதிக்குள் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணில் சீறிப்பாய்ந்த ஃபார்ல்கன் ராக்கெட்:
எதிர்பாராத விதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள, சுனிதா வில்லியம்ஸை மீட்கும் பணிகள் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு முடுக்கிவிடப்பட்டது. அதன்படி, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா இணைந்து விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்ட ராக்கெட், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அண்மையில் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து சரிசெய்யப்பட்டு, ஃபால்கன் 9 ராக்கெட்டில் 10வது குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. புளோரிடாவில் உள்ள தேசிய வானூர்தி விண்வெளி நிறுவனத்தின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, இன்று அதிகாலை இந்திய நேரப்படி 4:33 மணிக்கு ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
Liftoff of Crew-10! pic.twitter.com/OOLMFQgA52
— SpaceX (@SpaceX) March 14, 2025
ராக்கெட் புறப்பட்ட 2 நிமிடங்கள் 30 வினாடிகளுக்குப் பிறகு, வெற்றிகரமான முதல் கட்டப் பிரிவினை மேற்கொண்டது. க்ரூ-10 பூமியை விட்டு வெளியேறி 7 நிமிடங்கள் 50 வினாடிகளுக்குப் பிறகு, ஃபால்கன்-9 இன் முதல் நிலை பூஸ்டர், தரையில் உள்ள தரையிறங்கும் மண்டலம் 1 இல் தரையிறங்கியது.
Falcon 9 first stage separation and flip maneuver pic.twitter.com/VWcC2zjnDB
— SpaceX (@SpaceX) March 14, 2025
பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்:
ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது என்பது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கும் இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் சென்ற சக ஆராய்ச்சியாளரான புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவதன் முக்கிய நடவடிக்கையாகும். அந்த ராக்கெட்டில் பயணிக்கும் குழுவில், நாசாவின் ஆன் மெக்லைன் மற்றும் நிக்கோல் அயர்ஸ், ஜப்பானிய விண்வெளி நிறுவனமான ஜாக்சாவின் டகுயா ஒனிஷி மற்றும் ரஷ்ய ரோஸ்கோஸ்மோஸின் கிரில் பெஸ்கோவ் உள்ளிட்ட புதிய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கின்றனர்.
ஏவுதலின் வெற்றியை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்கள் விரைவில் பூமிக்குத் திரும்புவார்கள் என்பதை உறுதி செய்யும் விதமாகவும், விண்ணில் ஏவப்பட்ட 9 நிமிடங்கள் 53 வினாடிகளுக்குப் பிறகு டிராகன் காப்ஸ்யூல் ராக்கெட்டிலிருந்த வெற்றிகரமாக பிரிந்தது.
சுனிதா பூமிக்கு திரும்புவது எப்போது?
ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-10 விண்கலம் வெற்றிகரமான சுற்றுப்பாதையை அடைந்துள்ளதால், வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் மார்ச் 20 ஆம் தேதிக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. க்ரூ-10 விண்வெளி வீரர்கள் ISS-க்கு வந்தவுடன், அவர்கள் சுனிதா வில்லியம்ஸ், நிக் ஹேக், புட்ச் வில்மோர் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் உள்ளிட்ட தற்போதைய குழுவினருடன் பூமிக்கு திரும்ப உள்ளனர்.
9 மாத தவகாலம்:
நாசா திட்டமிட்டதை விட முன்னதாகவே வில்மோர் மற்றும் வில்லியம்ஸை மீண்டும் அழைத்து வருமாறு அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அமெரிக்க விண்வெளி நிறுவனம் இந்த பணியை முடுக்கிவிட்டது
வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில், வெறும் எட்டு நாட்கள் தங்க திட்டமிட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் புறப்பட்டனர். ஆனால், அவர்கள் பயணத்த காப்ஸ்யூலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 9 மாதங்களாக அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

