2025 இல் அதிகம் வசூலை அள்ளிய தமிழ் திரைப்படங்கள்

Published by: ABP NADU
Image Source: IMDB

2025 இல் வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலை இங்கு காணலாம்

Image Source: IMDB

விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்-த்ரிஷா இணைந்து நடித்த இப்படம் பிப்ரவரி 6, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. இதன் மொத்த உலகளாவிய வசூல் ரூ.150 கோடியாகும்.

Image Source: IMDB

மத கஜ ராஜா

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்த இந்த திரைப்படம் ஜனவரி 12, 2025 அன்று வெளியானது. இதன் உலகளாவிய வசூல் ரூ.56 கோடியாக பதிவாகியுள்ளது.

Image Source: IMDB

குடும்பஸ்தன்

ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்த இந்த நகைச்சுவை திரைப்படம், ஜனவரி 24, 2025 அன்று திரையரங்குகளை வந்தடைந்தது. இதன் மொத்த உலகளாவிய வசூல் ரூ.22 கோடியாகும்

Image Source: IMDB

காதலிக்க நேரமில்லை

ஜெயம் ரவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். ஜனவரி 14, 2025 அன்று வெளியான இத்திரைப்படம் ரூ.16.50 கோடி உலகம் முழுவதும் வசூலித்தது.

Image Source: IMDB

வணங்கான்

அருண் விஜய் நடித்த இத்திரைப்படம் ஜனவரி 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளிவந்து, உலகளாவிய அளவில் ரூ.13 கோடி வசூலித்துள்ளது.

Image Source: IMDB