மேலும் அறிய

Ranil Wickremesinghe: பீனிக்ஸ் பறவையாக மாறிய ரணில் விக்ரமசிங்க...சொந்த தொகுதியில் தோற்று அதிபரானவரின் வெற்றிக் கதை!

நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து பின்னர், நியமன உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க தற்போது இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு தொகுதியில் தோல்வி அடைந்து பின்னர், நியமன உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க தற்போது இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு பின்னர், பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலக, அந்த பதவி ரணிலுக்கு கிடைத்தது. இதற்கு பின்னரும், போராட்டம் தீவிரமடைய அதிபர் கோட்டபய ராஜபகசவும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இச்சூழலில், இடைக்கால அதிபராக பதவியேற்று தற்போது நாடாளுமன்றத்தின் மூலம் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ரணில். இதையடுத்து, அவரின் அரசியல் பயணம் குறித்து காண்போம்.

பீனிக்ஸ் பறவையாக மாறிய ரணில் விக்ரமசிங்க

73 வயதான ரணில் விக்ரமசிங்க சுமார் 45 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட கூடிய தலைவராக ரணில் திகழ்கிறார்.

Ranil Wickremesinghe: பீனிக்ஸ் பறவையாக மாறிய ரணில் விக்ரமசிங்க...சொந்த தொகுதியில் தோற்று அதிபரானவரின் வெற்றிக் கதை!

வசதியான அரசியல் குடும்பத்தில் பிறந்த ரணில் விக்கிரமசிங்க தொழில் ரீதியாக வழக்கறிஞர் ஆவார். 1977 இல் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1989ல் ரணசிங்க பிரேமதாச அதிபராக இருந்தபோது அரசியல் அடுத்த கட்டத்திற்கு சென்றார். 1993 இல் பிரேமதாஸ் படுகொலை செய்யப்பட்டு டி.பி. விஜேதுங்க அதிபராக பதவியேற்றபோது ரணில் முதல் முறையாக பிரதமரானார்.

1994 ஆம் ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் காமினி திசாநாயக்க படுகொலை செய்யப்பட்டபோது அக்கட்சியின் தலைவரானார். 2005ஆம் ஆண்டு, இலங்கை அதிபர் பதவிக்கு விக்கிரமசிங்க போட்டியிட்ட போது, ​​மஹிந்த ராஜபக்சவிடம் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவரானார். அதன் பின்னர் அவர் அதிபர் பதவிக்கு போட்டியிடவில்லை.

Ranil Wickremesinghe: பீனிக்ஸ் பறவையாக மாறிய ரணில் விக்ரமசிங்க...சொந்த தொகுதியில் தோற்று அதிபரானவரின் வெற்றிக் கதை!

2010இல், அவர் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை அதிபர் பதவி தேர்தலில் ஆதரித்தார். மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி வைத்தார்.

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பில் 260 பேர் கொல்லப்பட்ட போது, விக்கிரமசிங்க உலகளவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அவருக்கும் அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு, உளவுத்துறையின் தோல்விக்குக் காரணமாக மாறி, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் வரை இட்டு சென்றதாக கூறப்படுகிறது.

மத்திய வங்கியின் தலைவராக தனது நண்பரை ரணில் நியமித்ததாகவும் உள்நாட்டு வர்த்தக குற்றச்சாட்டில் அவர் சிக்கியபோது நண்பருக்கு ஆதரவாக செயலப்பட்டதாகவும் ரணில் மீது குற்றச்சாட்டு உள்ளது.

Ranil Wickremesinghe: பீனிக்ஸ் பறவையாக மாறிய ரணில் விக்ரமசிங்க...சொந்த தொகுதியில் தோற்று அதிபரானவரின் வெற்றிக் கதை!

2018ல் பிரதமர் பதவியில் இருந்து அவரை நீக்க முயன்ற அவருக்கும் சிறிசேனாவுக்கும் இடையேயான உறவில் இது விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து, மகிந்த ராஜபக்ச 52 நாட்களுக்கு பிரதமராக பதவியேற்றார். இது அரசியலைப்புக்கு எதிரான செயல் என விமர்சிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் இந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு விக்கிரமசிங்கே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். விக்கிரமசிங்க இந்தியாவுடன் நெருக்கமாக கருதப்படுகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Embed widget