மேலும் அறிய

Trump Vs Tiruppur: அய்யய்யோ.! இடியை இறக்கிய ட்ரம்ப் - முடங்கப் போகும் திருப்பூர் - அப்போ தொழிலாளர்களோட கதி.?

அமெரிக்க அதிபர் விதித்த பெரும் வரியால், திருப்பூர் முடங்கப்போகிறது என்றால் நம்புவீர்களா.? ஆம், அதுதான் உண்மை. ஏற்றுமதியில் பாதிக்கு மேல் குறையும் என்பதால், ஆடை உற்பத்தியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியாவிற்கு மொத்தமாக 50 சதவீத வரியை விதித்து, அதற்கான நிர்வாக உத்தரவிலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டு, அந்த வரி அமலுக்கும் வந்துவிட்டது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறுமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. இந்நிலையில், இந்த வரி உயர்வல், திருப்பூரில், ஆயத்த ஆடை ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்படும் என தெரிகிறது. இதனால், ஆடை உற்பத்தியாகள், அவர்களை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.

இந்தியாவிற்கு ட்ரம்ப் விதித்த இமாலய வரி

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப், தங்கள் நாட்டு பொருட்களுக்கு பல்வேறு நாடுகளும் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டினார். அதோடு நிற்காமல், தங்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு பதில் வரியை விதிக்கப் போவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் வரிகளை அறிவித்த ட்ரம்ப், அது அமலுக்கு வரும் தேதியை இரு முறை தள்ளி வைத்தார். அதற்குள், அனைத்து நாடுகளும் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என அவர் கெடு விதித்திருந்தார்.

ஆனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் பேச்சுவார்த்தைகளை நடத்திய நிலையில், சில நாடுகள் மட்டுமே ஒப்பந்தங்களை மேற்கொண்டன. இந்நிலையில், ஒப்பந்தங்களை மேற்கொள்ளாத நாடுகளுக்கு வரி தற்போது அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இந்திய குழு வாஷிங்டனில் முகாமிட்டு, பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால், அமெரிக்கா விதித்த நியாயமற்ற நிபந்தனைகளை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.

இந்த நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவை எச்சரித்த ட்ரம்ப், அப்படி செய்யாவிட்டால், கூடுதல் வரியையும், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு அபராதமும் விதிக்கப்போவதாக எச்சரித்திருந்தார்.

ஆனால், இந்தியா எந்தவித சாதகமான பதிலையும் தராததால், ஏற்கனவே இந்தியாவிற்கு விதித்திருந்த 25 சதவீத வரியுடன், அதிரடியாக 25 சதவீதம் கூடுதல் வரியை விதித்தார் ட்ரம்ப். இதனால், இந்தியாவிற்கான மொத்த வரி 50 சதவீதம் என அறிவித்து, அதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்தும் இட்டார். இதனால் வரிகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன.

திருப்பூருக்கு என்ன பாதிப்பு.?

தமிழ்நாட்டில், ஆயத்த ஆடை உற்பத்திக்கு பெயர் போனது திருப்பூர். அங்கிருந்து, ஆண்டுக்கு 40,000 கோடி ரூபாய் அளவிலான ஆயத்த ஆடைகள் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதில், அமெரிக்காவிற்கு மட்டும் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இவ்வாறு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளுக்கு, அமெரிக்கா ஏற்கனவே 16 சதவித வரியை விதித்து, அது அமலில் இருந்ததாகவும், தற்போது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதால், ஆயத்த ஆடைகளுக்கான வரி மொத்தமாக 66 சதவீதம் உயர்ந்துள்ளதாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஏற்படும் விலை உயர்வால், அமெரிக்காவில், திருப்பூர் ஆயத்த ஆடைகள் விற்பனை பாதியாக குறைந்துவிடும் என்றும், அதனால், ஆயத்த ஆடை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்

இவ்வாறு ஆயத்த ஆடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டல், அது உற்பத்தியாளர்களையும் பாதிக்கும். அந்த பாதிப்பு, ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது தான் எதிரொலிக்கும். நிறுவனம் பாதிப்பிற்குள்ளாகும் போது, தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். அப்படி நடக்கும் பட்சத்தில், ஆடை உற்பத்தி தொழில் ஒன்றையே நம்பி, திருப்பூரில் இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிடும்.

இது, திருப்பூருக்கு மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு துறைகளுக்கும் இது பொருந்தும். அதனால், சூழலை சரி செய்ய இந்திய அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போது அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ
பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
Embed widget