நம்பிக்கையில்லா தீர்மானம்; நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் அரசு மேல் முறையீடு
நம்பிக்கையில்லா தீர்மானம்; உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இம்ரான் கான் மேல் முறையீடு
நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த துணை சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என்கிற பாகிஸ்தான் நாட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இம்ரான் கான் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது.
பாகிஸ்தானில் தொடர்ச்சியாக பொருளாதார சரிவு மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கானை பதவி விலகுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறன. இந்நிலையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன.
ஆனால் தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தார். இதனையடுத்து சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து இம்ரான் கான் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளதாக அந்நாட்டின் செய்தி ஊடகமான ARY தெரிவித்துள்ளது. 342 எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெற்றிப்பெற 172க்கும் அதிகமான எம்.பிக்களின் ஓட்டுகள் வேண்டும். இந்த சூழலில், ஆளும் கட்சி தொடர்ந்து வாக்கெடுப்பை தாமதப்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த பின்னணியில்தான் இன்று இரவு 8.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் ஒரு வேளை எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றால் அந்நாட்டின் புதிய அதிபராக ஷேபாஸ் ஷெரிப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப காலங்களாக சீனா, பாகிஸ்தானின் குறிப்பிட்ட சில பகுதிகளில் முதலீடு செய்துள்ளது. பாகிஸ்தான் தனது பொருளாதார வளர்ச்சிக்கும் கணிசமான அளவில் சீனாவையே நம்பியுள்ளது. ஆனாலும் பொருளதார நெருக்கடிகள் தீவிரமடைந்து வருவதை தவிர்க்க முடியவில்லை.
இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களின் நெருக்கடியை குறைக்க, நாட்டின் இறையான்மையை பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
மக்களின் இந்த போராட்டத்திற்கு பின்னணியில் அமெரிக்க படைகளின் துருப்புகள் இருப்பதாக இம்ரான் கான் சந்தேகம் எழுப்பியுள்ளார். அவர்கள் தங்கள் நாட்டு மக்களுடன் தொடர்ந்த உரையாடி வருவதாகவும் கான் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான இதர விவரங்களை பொது வெளியில் பகிர விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்படியாயினும் இன்று இரவு நடைபெறும் வாக்கெடுப்பில் முழு விவரங்கள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.