மேலும் அறிய

"நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்படும்" காலிஸ்தானி பிரிவினைவாதி மிரட்டல்.. மத்திய அரசு பதிலடி

நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்துவோம் என்ற பன்னுன் விடுத்த மிரட்டலுக்கு இந்தியா அரசு எதிர்வினை ஆற்றியுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் செய்யும் செயல்கள் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. சமீபத்தில் கூட, வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை காலிஸ்தானி ஆதரவாளர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக, காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன்,  ஏர் இந்தியா விமான பயணிகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார். 

"நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்துவோம்"

இச்சூழலில், டிசம்பர் 13ஆம் தேதிக்கு முன்போ அல்லது அதே தேதியிலோ இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்படும் என குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்திருந்தார். கடந்த 2001ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தாக்குதல் நடத்திய 5 பேர் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

நாடாளுமன்ற தாக்குதல் நடந்த அதே தேதியில், தாக்குதல் நடத்தப்படும் என பன்னுன் மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.  நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி பேசுகையில், "நாடாளுமன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். நாடாளுமன்றம் இயங்கி வருவதால், ​​நாங்கள் கவனமுடன் இருக்கிறோம். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" என்றார்.

பதிலடி தந்த மத்திய அரசு:

இந்த நிலையில், பன்னுன் விடுத்த மிரட்டலுக்கு இந்தியா எதிர்வினை ஆற்றியுள்ளது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "பாதுகாப்பு விவகாரங்களில் கருத்துத் தெரிவிக்க நான் சரியான நபர் இல்லை. 

இருப்பினும், இந்த மாதிரியான அச்சுறுத்தல்களை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். நாம் இங்கே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளோம். விளம்பரத்துக்காக மிரட்டல் விடுக்கும் இத்தகைய தீவிரவாதிகளை நான் பெரிதாக்கவோ அல்லது அதிக முக்கியத்துவம் வழங்கவோ விரும்பவில்லை. மறுபுறம், நாங்கள் இதை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த குறிப்பிட்ட விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் கனடா அதிகாரிகளுடன் இந்த விஷயத்தை எடுத்து சென்றுள்ளோம்" என்றார்.

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவுக்கு ஏற்கனவே பெரும் தலைவலியாக மாறிய நிலையில், மற்றொரு காலிஸ்தான் பிரிவினைவாதியான பன்னுனை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாகவும் இதை அமெரிக்க தடுத்து நிறுத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது.

இந்தியாவுக்கு குடைச்சல் தந்து வரும் சீக்கிய பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொல்ல திட்டமிடப்பட்டதாகவும் அந்த முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்தியா அதிகாரி ஒருவர்தான் இந்த சதி திட்டத்தை தீட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: தமிழ்நாட்டில் மோடி, ராகுல், “மசோதா தோல்வி-வரலாறு மன்னிக்காது“, இந்தியா புறப்பட்ட கப்பல்கள் - 11 மணி செய்திகள்
தமிழ்நாட்டில் மோடி, ராகுல், “மசோதா தோல்வி-வரலாறு மன்னிக்காது“, இந்தியா புறப்பட்ட கப்பல்கள் - 11 மணி செய்திகள்
Russia Crude Oil: அப்பாடா.. நிம்மதி.! கச்சா எண்ணெய் இறக்குமதி; ட்ரம்ப் முக்கிய முடிவு; ரஷ்யாவுக்கு ஜாக்பாட்.!
அப்பாடா.. நிம்மதி.! கச்சா எண்ணெய் இறக்குமதி; ட்ரம்ப் முக்கிய முடிவு; ரஷ்யாவுக்கு ஜாக்பாட்.!
Trump Vs Ghalibaf: “அவர் சென்னது எல்லாமே பொய்“; ட்ரம்ப்பை கிழித்து தொங்கவிட்ட ஈரான் சபாநாயகர்; பாய்ண்ட் பாய்ண்ட்டாக பதிவு
“அவர் சென்னது எல்லாமே பொய்“; ட்ரம்ப்பை கிழித்து தொங்கவிட்ட ஈரான் சபாநாயகர்; பாய்ண்ட் பாய்ண்ட்டாக பதிவு
USA Iran War: ”ட்ரம்ப் சொன்ன மாதிரி நாங்க எதையும் தூக்கி கொடுக்கல.. பொய்யா பேசிக்கிட்டு” ஈரான் திட்டவட்டம்
USA Iran War: ”ட்ரம்ப் சொன்ன மாதிரி நாங்க எதையும் தூக்கி கொடுக்கல.. பொய்யா பேசிக்கிட்டு” ஈரான் திட்டவட்டம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று இரவு 8:30-க்கு டிவி முன்னாடி ரெடியா இருங்க! - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் முக்கிய உரை; என்ன பேசப்போகிறார்?
இன்று இரவு 8:30-க்கு டிவி முன்னாடி ரெடியா இருங்க! - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் முக்கிய உரை; என்ன பேசப்போகிறார்?
Rahul Gandhi: பிரதமர் மோடியால் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் தேர்தல் பரப்புரை!
Rahul Gandhi: பிரதமர் மோடியால் மு.க.ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது - ராகுல் தேர்தல் பரப்புரை!
RCB vs DC: சிவப்புக்கு பதில் பச்சை நிற ஜெர்சி... பெங்களூரு அணியின் 'கோ கிரீன்' ரகசியம் இதுதான்!
RCB vs DC: சிவப்புக்கு பதில் பச்சை நிற ஜெர்சி... பெங்களூரு அணியின் 'கோ கிரீன்' ரகசியம் இதுதான்!
MK Stalin Video: “புது வரலாறு படைத்துள்ள திமுக-வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது!“; வீடியோ வெளியிட்டு முதல்வர் மகிழ்ச்சி
“புது வரலாறு படைத்துள்ள திமுக-வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது!“; வீடியோ வெளியிட்டு முதல்வர் மகிழ்ச்சி
TVK Vijay: ”லிமிட்டே இல்லாமல் ஊழல் செய்த லிமிடெட் கம்பெனி.. விசில் புயலில் வீழ்வது உறுதி” - விஜய் ஆவேசம்
TVK Vijay: ”லிமிட்டே இல்லாமல் ஊழல் செய்த லிமிடெட் கம்பெனி.. விசில் புயலில் வீழ்வது உறுதி” - விஜய் ஆவேசம்
TVK Sengottaiyan: செங்கோட்டையன் மீதான விவகாரமான புகார் என்ன? கோபியில் எடப்பாடி மறைத்த உண்மை தெரியுமா?
TVK Sengottaiyan: செங்கோட்டையன் மீதான விவகாரமான புகார் என்ன? கோபியில் எடப்பாடி மறைத்த உண்மை தெரியுமா?
GOLD SILVER RATE: வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்; சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? வெள்ளியும் இப்படி பண்ணிடுச்சே.!
வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த தங்கம்; சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? வெள்ளியும் இப்படி பண்ணிடுச்சே.!
Russia Crude Oil: அப்பாடா.. நிம்மதி.! கச்சா எண்ணெய் இறக்குமதி; ட்ரம்ப் முக்கிய முடிவு; ரஷ்யாவுக்கு ஜாக்பாட்.!
அப்பாடா.. நிம்மதி.! கச்சா எண்ணெய் இறக்குமதி; ட்ரம்ப் முக்கிய முடிவு; ரஷ்யாவுக்கு ஜாக்பாட்.!
Embed widget