மாணவி மகள் போன்றவர் இல்லையா? – ஒரே விஷயத்தில் கேள்வி எழுப்பும் இபிஎஸ் அண்ணாமலை! சிக்கலில் திமுக
கோவை மாணவி பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு அரசியல் கட்சித் தலைவரக்ள் கடும் கணடனத்தை பதிவு செய்துள்ளனர்.
நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருவதும் வாடிக்கை ஆகி வருகிறது.
இந்நிலையில் கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 7 கல்லூரி மாணவரகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்கள் மூலம் பழகி 17 வயது சிறுமியை தொடர்பு கொண்ட இளைஞர்கள் அவரை ரூமுக்கு வரவழைத்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமி வீட்டிற்கு வராததால் அவரது பாட்டி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சிறுமி மறுநாள் வீட்டிற்கு வந்தார்.
அவரிடம் போலீசார் விசாரித்ததில் நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து போலீசார் 7 மாணவர்களையும் கைது செய்தனர்.
இந்நிலையில் இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது.
"குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம்" என்று சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்?
தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? இவரின் பாதுகாப்பு பரிபோனதற்கு யார் பொறுப்பு?
பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்துவிட்டு, விளம்பர மோகத்தில் இருக்கும் மு.க.ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கோவை மாணவி பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை “கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதைத்தான் சிறுமிகள் மீதான இது போன்ற கூட்டுப் பாலியல் வன்முறைகள் காட்டுகின்றன.
ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் தினம் தினம் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள், பெண் அரசு அதிகாரிகள் என, பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்றால், அவனைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்தி விட்டு, வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

