மேலும் அறிய

யாருடைய குழந்தையா? இது என்ன கேள்வி: வசைபாடியவர்களுக்கு பதிலடி கொடுத்த தன்பாலின ஈர்ப்பு இணை..

வாடகை தாய் கிடைத்த பிறகு நான்கு கட்ட பரிசோதனைகளுக்கு பின்பு, குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியத் தம்பதிகளான அமித் ஆத்மா மற்றும் அதித்யா மதிராஜூ இருவரும் தாங்கள் கருவூற்றிருப்பதாக தங்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவில் வசிக்கும் தன்பால் ஈர்ப்பின தம்பதி, அமித் ஆத்மா மற்றும் ஆதித்யா மதிராஜு கடந்த 2019ம் ஆண்டு இந்து முறைப்படி வெகுவிமரிசையாக திருமணம் செய்து கொண்டனார். பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த திருமணம் இணையத்தில் வைரலாகி, பெருத்த கவனம் ஈர்த்தது. இந்நிலையில், அவர்கள் நேரடியாக குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து, குழந்தையை பெற்றுக்கொள்வதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை முறை மற்றும் பரிசோதனைகள் தொடர்பாக அறிந்துகொள்ள முயற்சித்தனர். வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக்கொள்ளுதல், கருமுட்டையை தானமாக வழங்குதல், ஒரு பெண்ணிடம் இருந்து மற்றொரு பெண்ணுக்கு கருமுட்டை வழங்குதல் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் கற்றறிந்துள்ளனர். இருவரில் யார் ஒருவர் குழந்தை பெறும் முயற்சியில் நேரடியாக ஈடுபடுவது என்பதையும் முடிவு செய்த அவர்கள், வழக்கமான தம்பதியாக இல்லாமல், தன்பால் ஈர்ப்பின தம்பதியாக குழந்தையை பெறுவது என்பது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்துள்ளனர். வாடகை தாய் கிடைத்த பிறகு நான்கு கட்ட பரிசோதனைகளுக்கு பின்பு, குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, அவர்களின் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும், ஸ்கேனிங் புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதற்கு அன்பும் ஆதரவும் அளித்து பலர் கமெண்ட் செய்தாலும், இந்த தன்பால் உறவை கொச்சைப் படுத்தியும், இந்த உறவில் எப்படி கருவுறுதல் சாத்தியமாகும் என்றும் கேள்வி எழுப்பி பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். 

View this post on Instagram
 
A post shared by Aditya Madiraju (@adityamadiraju)

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியிருக்கும் இந்தத் தம்பதியினர், “இரண்டு நபர்கள் கருத்தரிக்காமல், கருவுறுதல் இந்திய வரலாற்றில் இது முதன்முறை அல்ல. தன்பால் ஈர்ப்பு கொண்ட முக்கியப் பிரபலங்களும்,  கரு சுமக்காமல் வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் செலப்ரிட்டி ஜோடிகளும் இந்த முறையைத் தேர்ந்தெடுத்து குழந்தை பெற்றுள்ளனர். அதனால் இவ்வாறு குழந்தை பெறுதல் சாத்தியமே. இந்த முறையில் எங்களில் ஒருவரது விந்தணு குழந்தையை பெற உபயோகப்படுத்தப்பட்டதால் உயிரியியல் ரீதியாக குழந்தை எங்களில் ஒருவருடன் தொடர்புடையது, என்றாலும் அது தற்போது முக்கியமல்ல.

நாங்கள் விரும்பும் வகையிலான குடும்பத்தைத் தேர்ந்தெடுக்க எங்களுக்கு முழு உரிமை உண்டு. இதற்காக நாங்கள் இரண்டரை ஆண்டுகள் கடுமையாக போராடினோம். இப்போது எங்களுக்குத் தேவை அன்பு மட்டுமே. அதனால் நாங்கள் விரும்பும் குடும்பத்தை அமைத்துக்கொள்ள வாய்த்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம்.அவ்வளவே” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
Embed widget