Shocking Video : தரையிறங்கும்போது இரண்டு துண்டாக உடைந்த விமானம்.. அதிர்ச்சி வீடியோ
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் நல்ல நிலையில் இருப்பதாக கோஸ்டாரிகாவின் தீயணைப்பு வீரர்களின் தலைவர் ஹெக்டர் சாவ்ஸ் கூறினார்.
கோஸ்டாரிகாவில் அவசரமாக தரையிறங்கும் போது ஒரு சரக்கு விமானம் உடைந்து விபத்துக்குள்ளானது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சான் ஜோஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஜெர்மன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான டிஹெச்எல்லின் விமானம் விபத்துக்குள்ளானது.
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் நல்ல நிலையில் இருப்பதாக கோஸ்டாரிகாவின் தீயணைப்பு வீரர்களின் தலைவர் ஹெக்டர் சாவ்ஸ் கூறினார். இருப்பினும், மருத்துவப் பரிசோதனைக்காக முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
சான் ஜோஸுக்கு வெளியே உள்ள ஜுவான் சான்டாமரியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போயிங்-757 விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்க திரும்பியது. 25 நிமிடங்களுக்குப் பிறகு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகு காலை 10:30 மணிக்கு விபத்து ஏற்பட்டது. .
ஹைட்ராலிக் பிரச்சனை தொடர்பாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விபத்தால் மாலை 6:00 மணிவரை விமான நிலையம் மூடப்பட்டது.
Video footage of the DHL Boeing 757 Freighter just as it skidded off the runway at SJO.
— AviationSource (@AvSourceNews) April 7, 2022
Read more at AviationSource!https://t.co/63ONa6oRCD
Source: Unknown#DHL #JuanSantamariaAirport #AvGeek #Crash #Accident pic.twitter.com/EI9ew6YVXN
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்