மேலும் அறிய

Ayman al-Zawahiri: மருத்துவர் அய்மன் அல்கொய்தா தலைவரானாரா? எப்படி? யார் இந்த அய்மன் அல்-ஜவாஹிரி?

Ayman al-Zawahiri:கிளினிக் வைத்திருந்த அய்மன் அல்-ஜவாஹிரி அல்-கொய்தா அமைப்பில் இணைந்தது எப்படி, அல்-கொய்தாவின் தலைவரானது எப்படி? இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம். 

அல்-கொய்தா தலைவர் கொலை:

”நீங்கள் எவ்வளவு ரகசியமான இடத்தில் பதுங்கி இருந்தாலும், எத்தனை காலம் எடுத்தாலும், அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பின், உங்களைக் அழித்துவிடுவோம்” என்று உறுதி அளித்திருந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். 

அதற்கு சாட்சியாக நிற்கிறது, அல்-கொய்தா தலைவராக இருந்த அய்மன் அல்-ஜவாஹிரி அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. டிரோன் மூலம் தாக்குதல் நடத்திக் கொன்றிருக்கும் செய்தி. 

ஒசாமா-பின்- லேடனுக்குப் பிறகு தலைவராக இருந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

கண் மருத்துவம் படித்து கெய்ரோ புறநகரில் கிளினிக் வைத்திருந்த அய்மன் அல்-ஜவாஹிரி அல்-கொய்தா அமைப்பில் இணைந்தது எப்படி, அல்-கொய்தாவின் தலைவரானது எப்படி? அய்மன் அல்-ஜவாஹிரி யார்? -இந்த கேள்விகளுக்கான விடைகளை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம். 

71 வயதான அய்மன் அல்-ஜவாஹிரி, அமெரிக்காவில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக அமைந்தவர். 2001, செப்டம்பர்,11 அன்று நடந்த இரட்டை கோபுர தாகுக்குதலுக்கு முக்கியமான காரணமானவர். 

Ayman al-Zawahiri: மருத்துவர் அய்மன் அல்கொய்தா தலைவரானாரா? எப்படி? யார் இந்த அய்மன் அல்-ஜவாஹிரி?

யார் இவர்?
 
ஜவாஹிரி, 1951-ல் எகிப்து தலைநர் கெய்ரோவில் (Cairo), கல்வியில் சிறந்து, அறிஞர்கள் பலரை கொண்ட குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மருத்துவர். ஜவாஹிரியின் தாத்தா Rabia'a al-Zawahiri,  கெய்ரோ மருத்துவக் கல்லூரி (al-Azhar University in Cairo.) பேராசிரியர். அவரின் மாமா அப்டெல் ரஹ்மான் அஸாம்( Abdel Rahman Azzam) அரபு நாடுகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தவர்.
 
கண் மருத்துவரான ஜவாஹிரிக்குள் தீவிரவாத எண்ணங்களும் இருந்தன. இவர் எகிப்தில் தலைமறைவாக இயங்கிய 'முஸ்லிம் பிரதர்ஹுட்' அமைப்பில்  15 வயதிலேயே தன்னை இணைத்து கொண்டு தீவிரமாக செயல்பட தொடங்கினார். ஜவாஹிரி, 1981- எகிப்து அதிபர், அன்வர் சதாத் (Anwar Sadat) கொலை செய்யப்பட்டதில் முக்கிய குற்றவாளியாக சிறையிலடைக்கப்பட்டார். சிறையில் இருந்து அளித்த பேட்டி ஒன்றில், ஜவாஹிரி கூறுகையில்,” இந்த உலகத்திடம் நாங்கள் பேச விரும்புகிறோம்; நாங்கள் யார்?” என்று கூறியிருக்கிறார். சிறையில் அவருக்கு கிடைக்க அனுபவங்கள் அவரை இன்னும் தீவிரவாத எண்ணங்களுடன் செயல்பட தூண்டியதாக கூறப்படுகிறது. 
 
Ayman al-Zawahiri: மருத்துவர் அய்மன் அல்கொய்தா தலைவரானாரா? எப்படி? யார் இந்த அய்மன் அல்-ஜவாஹிரி?
 
அவருக்கு விடுதலை கிடைத்ததும் சவூதி அரேபியா சென்ற ஜவாஹிரி,  பாகிஸ்தானின் பெஷாவர், ஆப்கானிஸ்தானில்  தலைமறைவாக வாழ்ந்து, எகிப்து இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புக்கு  ஆதரவு திரட்டினார். ஒரு மருத்துவராகவே அளித்தபடி ரகசியமாக தாக்குதல் நடத்தியதால் பலருக்கும் இவர் மீது எவ்வித சந்தேகமும் எழவில்லை. மருத்துவராக இவர் மீது நம்பிக்கை இருந்து வந்தது. அவரது அமைப்பு தொடர்ச்சியாக எகிப்தில் தாக்குதல் நடத்தி பலரையும் கொன்று குவித்தனர். 

ஆப்கானிஸ்தானில் சோவியத் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜவாஹிரி சென்றார். அங்குதான் இவர் ஒசாமா- பின் - லேடனை (Osama bin Laden ) சந்தித்தார்.  இருவரும் "Afghan Arabs.” என்ற வகையில் ஒன்றிணைந்தனர். 

Ayman al-Zawahiri: மருத்துவர் அய்மன் அல்கொய்தா தலைவரானாரா? எப்படி? யார் இந்த அய்மன் அல்-ஜவாஹிரி?

தொடங்கிய அல்-கொய்தா (al Qaeda)பயணம்:

1998-ல் World Islamic Front  அமைப்பிற்காக இருவரும் கூட்டாக அறிவிப்பினை வெளியிட்டனர். எகிப்து இஸ்லாமிக் ஜிஹாத் (Egyptian Islamic Jihad) மற்றும் அல்-கொய்தா (al Qaeda) அமைப்பு இணைவதாக அறிவித்தனர். அப்போது, ஒசாமா பின் லேடனினுக்கு தனிப்பட்ட மருத்துவராக இருந்தார் ஜவாஹிரி.
 
ஜவாஹிரியும், “ சகோதரர் பின் லேடனுடன் இணைந்து பணியாறுகிறோம் என்றும், அவரை பத்தாண்டுகளுக்கும் மேலாக நன்கறிவேன் என்றும் அவர் கூறியிருந்தார். 
 
2001-ல் இருவரிம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.  ’இரு அமைப்புகளும் இணைந்து அமெரிக்க மக்கள், அமெரிக்காவுடன் கூட்டணியில் இருக்கும் நாடுகள், அங்குள்ள இராணுவம் என இஸ்லாமிற்கு எதிராக உள்ள அனைவரையும் கொலை செய்ய உறுதி ஏற்பதாக அந்த ஒப்பந்தத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 
Ayman al-Zawahiri: மருத்துவர் அய்மன் அல்கொய்தா தலைவரானாரா? எப்படி? யார் இந்த அய்மன் அல்-ஜவாஹிரி?

அல்-கொய்தா அமைப்பும் ஜவாஹிரியும்:

அல்-கொய்தா அமைப்பில் இணைந்ததும், ஜவாஹிரி பல்வேறு தாகுக்குதலுக்கு திட்டமிடுவது வழக்கமானது. கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரங்கள் தாக்குதலுக்கு உள்ளானது, ஜவாஹிரியின் திட்டமிடுதல்தான். அது தற்கொலை படை தாக்குதல். 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்; 5000 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

2000 ஆம் ஆண்டு அக்டோபரில் ஏமனில் நடந்த தாக்குதல், அமெரிக்காவில் படகு ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதல் இவர் தலைமையில் நடந்தது. 

2011, செப்டம்பர்,11 அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் இவருடைய திட்டம். அதில் 3000 பேர் உயிரிழந்தனர்.  இதோடு மட்டுமல்லாமல், பலர் விடீயோக்களில் ஜவாஹிரி பேசியுள்ளார். ‘ நாங்கள் இழந்த உரிமைகளை பெறவே முயற்சிக்கிறோம்.’ என்று பேசியிருந்தார்.

Ayman al-Zawahiri: மருத்துவர் அய்மன் அல்கொய்தா தலைவரானாரா? எப்படி? யார் இந்த அய்மன் அல்-ஜவாஹிரி?

ஜவாஹிரி அல்-கொய்தா அமைப்பும் தலைவர்:

2011-ல் ஒசாமா -பின் -லேடன் கொல்லப்பட்ட பிறகு, அல்-கொய்தா அமைப்பை வழிநடத்தி வருகிறார் ஜவாஹிரி. இந்த அமைப்பின் தலைவராக ஜவாஹிரி மிகச் சிறந்தவர் என்று கூறிவிட முடியாது. ஆனால், இவர் அச்சுறுத்தும் பல்வேறு செயல்களுக்காக திட்டமிட்டிருந்தார். இவர் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால், அல்-கொய்தாவின் வலிமை தீவிரமாக இல்லை.

அய்மன் அல்-ஜவாஹிரி,  ஜூலை, 13 அன்று அல்-கொய்தாவின் ஊடகப் பிரிவுக்கு ஆடியோ மெசேஜ் செய்திருந்ததுதான் இறுதியான உரையாடல்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget