Asia Cup Venue: என்னவோ கத்திட்டு போங்க.. இந்தியா Vs பாகிஸ்தான், ஆசிய கோப்பைக்கான மைதானங்கள் அறிவிப்பு
Asia Cup 2025 Venue: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பதற்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Asia Cup 2025 Venue: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி ஆசிய கோப்பையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை 2025: மைதானங்கள் அறிவிப்பு
நடப்பாண்டில் ஆசிய கோப்பை போட்டிகளை நடத்துவதற்கான இடங்களை, ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் உறுதி செய்துள்ளது. அதன்படி, கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி, செப்டம்பர் 14ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில், செப்டம்பர் 9ம் தேதியன்று அபுதாபியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் மோத உள்ளன. செப்டம்பர் 28ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டி துபாயில் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா Vs பாகிஸ்தான்
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் போன்ற சம்பவங்களுக்குப் பிறகும், பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவதற்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு குவிந்து வருகிறது. அதேநேரம் இங்கிலாந்தில் நடைபெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஸ் லீக் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட மறுத்து அரையிறுதிப் போட்டியில் இருந்து இந்தியா வெளியேறியது. அதே பாணியில் ஆசிய கோப்பையையும் இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் இரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான இடத்தை உறுதி செய்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதும் வாய்ப்புள்ளது. இது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 போட்டிக்கு தயாராவதற்கு அணிகளுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று முறை மோதும் வாய்ப்பு:
லீக் சுற்றின் முடிவில் இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறினால், அதிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோது வாய்ப்புள்ளது. அதைதொடர்ந்து ஒருவேளை இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், நடப்பாண்டு ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் 3 முறை மோதக்கூடும். இந்த போட்டியில் குரூப் எ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் உள்ளன.குரூப் பி பிரிவில் வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த போட்டியில் இந்திய அணி சூர்யகுமார் யாதப் தலைமையில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை 2025 - முழு அட்டவணை
- செப்டம்பர் 9 - ஆஃப்கானிஸ்தான் vs ஹாங்காங் (அபுதாபி)
- செப்டம்பர் 10 - இந்தியா vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய்)
- செப்டம்பர் 11 - வங்கதேசம் vs ஹாங்காங் (அபுதாபி)
- செப்டம்பர் 12 - பாகிஸ்தான் vs ஓமன் (துபாய்)
- செப்டம்பர் 13 - வங்கதேசம் vs இலங்கை (அபுதாபி)
- செப்டம்பர் 14 - இந்தியா vs பாகிஸ்தான் (துபாய்)
- செப்டம்பர் 15 - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் vs ஓமன் (அபுதாபி) மற்றும் இலங்கை vs ஹாங்காங் (துபாய்)
- செப்டம்பர் 16 - வங்கதேசம் vs ஆqப்கானிஸ்தான் (அபுதாபி)
- செப்டம்பர் 17 - பாகிஸ்தான் vs UAE (துபாய்)
- செப்டம்பர் 18 - இலங்கை vs ஆந்ப்கானிஸ்தான் (அபுதாபி)
- செப்டம்பர் 19 - இந்தியா vs ஓமன் (அபுதாபி)
சூப்பர் 4 சுற்று
- செப்டம்பர் 20 - B1 vs B2 (துபாய்)
- செப்டம்பர் 21 - AI vs A2 (துபாய்)
- செப்டம்பர் 23 - A2 vs B1 (அபுதாபி)
- செப்டம்பர் 24 - A1 vs B2 (துபாய்)
- செப்டம்பர் 25 - A2 vs B2 (துபாய்)
- செப்டம்பர் 26 - A1 vs B1 (துபாய்)
- செப்டம்பர் 28 - இறுதிப் போட்டி (துபாய்)



















