Coolie Audio Launch LIVE: நானும் எவ்ளோதான் நல்லவனாவே நடிக்கிறது...அஜித் வசனம் பேசிய ரஜினிகாந்த்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது
LIVE

Background
கூலி இசை வெளியீடு
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 171 ஆவது படமாக உருவாகியுள்ளது கூலி. இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பு நிறைவுக்கு வந்தது. வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி கூலி திரைப்படம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இன்று கூலி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணி முதல் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
கூலி படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள். அதீத வன்முறை காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றிருப்பதால் சென்சார் வாரியம் இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கியுள்ளது. A சான்றிதழ் வழங்கப்பட்டாலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்பதால் படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் பெரிய வரவேறு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ரஜினி பேசப்போவது என்ன
ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் ரஜினி இன்று மேடையில் என்ன பேசப் போகிறார் என்பது தான். ரஜினி தவிர்த்து ஆமிர் கான் , லோகேஷ் கனகராஜ் , அனிருத் , சன் பிக்ச்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன் ஆகியவர்கள் சுவாரஸ்யமான விஷயங்களை நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்
நடிகர்கள்
தமிழ், மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என அனைத்து திரைத்துறையைச் சேர்ந்த ஸ்டார் நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நாகர்ஜூனா , சத்யராஜ் , உபேந்திரா , செளபின் சாஹிர் , ஆமீர் கான் , ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இதனால் இப்படத்திற்கு அனைத்து மொழிகளிலும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அனிருத் இசை
பேட்ட , தர்பார் , ஜெயிலர் , வேட்டையன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ரஜினியின் கூலி படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். தற்போது வரை மோனிகா , கூலி பவர்ஹவுஸ் , சிகிட்டு ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக அண்மையில் வெளியான கூலி பவர்ஹவுஸ் பாடல் ஜெயிலர் படத்தின் ஹுகும் பாடலுக்கு நிகராக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்த பாடலை அனிருத் மேடையில் பாட இருக்கிறார்.
கூலி ப்ரீ பிஸ்னஸ்
ரிலீஸுக்கு முன்பே கூலி படம் வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது. ரூ 400 கோடி பட்ஜெட்டில் கூலி திரைப்படம் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இப்படத்தின் ரிலீஸ் உரிமம் ரூ 110 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெலுங்கில் ரிலீஸ் உரிமம் ரூ 46 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூலி ஓடிடி உரிமம் அமேசான் பிரைம் தளத்திற்கு ரூ 120 கோடிக்கும் வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் ரூ 86 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. ரிலீஸூக்கு முன்பே கூலி திரைப்படம் முனபதிவுகளுடன் சேர்த்து 500 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1000 கோடி வசூல் சாத்தியமா
இந்தியில் ஷாருக் கான் நடித்த பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள் அடுத்தடுத்து 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தன. தெலுங்கில் பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படம் ரூ 1000 கோடி வசூலித்தது. அந்த வகையில் தமிழில் விஜயின் தி கோட் , சூர்யாவின் கங்குவா ஆகிய படங்கள் 1000 கோடி வசூல் ஈட்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. தமிழில் இப்படங்களுக்கு பெரியளவில் வரவேற்பு இருந்தாலும் வடமாநிலங்களில் இப்படங்களுக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அந்த வகையில் கூலி படத்திற்கு தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களிலும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தயாரிப்பு நிறுவனமும் படத்திற்கு எல்லா பக்கமும் பிரம்மாண்டமாக ப்ரோமோஷன் செய்து வருகிறது. இதனால் தமிழில் ரூ 1000 கோடி வசூலிக்கும் முதல் படமாக கூலி படம் சாதனை படைக்கும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளார்கள்.
அஜித் வசனம் பேசிய ரஜினி
நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த் அஜித்தின் பிரபல வசமான " நானும் எத்தன நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது' என்கிற வசனத்தை பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது
Coolie Audio Launch LIVE: ரஜினி மட்டும்தான் சூப்பர்ஸ்டார்...தயாரிப்பாளர் கலாநிதி மாறன்
கூலி இசை வெளியீட்டில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ' ரஜினிகாந்த் ஒரிஜினல் சூப்பர்ஸ்டார் மட்டும் கிடையாது அவர் மட்டும் தான் one & only சூப்பர்ஸ்டார்" என கூறியுள்ளார்
Coolie Audio Launch LIVE: சம்பளம் பத்தி கூட கேக்கல...கூலி ஆடியோ லாஞ்சில் ஆமீர் கான்
கூலி இசை வெளியீட்டில் பேசிய நடிகர் ஆமிர் கான் " லோகேஷ் கனகராஜ் இந்த படத்தைப் பற்றி சொன்னது என்ன கதை ,எவ்வளவு சம்பளம் என எதைப் பற்றியும் நான் கேட்கவில்லை. ஏனால் இது ரஜினி சார் படம் " என கூறியுள்ளார்





















