எனக்கு அந்த டிக் கிடைக்கவில்லை.. எம்.எஸ். தோனி சொன்ன சூசக பதில்.. சிஎஸ்கே கேப்டன் யார்?
அடுத்த ஐபிஎல் சீசனில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு சூசகமான பதில் அளித்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அவரை எல்லோருமே தல தோனி என்றே செல்லமாக அழைப்பார்கள். குறிப்பாக தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவரது ஹெலிகாப்டர் ஷாட்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருப்பதைப் போல, 44 வயதைக் கடந்து, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகும் அதே உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கிறார் என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெறுவார் என அனைவரும் கூறி வந்த நிலையில், ரசிகர்களுக்காக சிஎஸ்கே அணியின் கேப்டனாக விளையாடி அனைவரது அன்பையும் பெற்றார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஓய்வு குறித்து சூசகமாக பதில் அளித்திருக்கிறார். அண்மையில் அளித்த பேட்டியில், சென்னை எனக்கு எப்போதும் ரொம்ப ஸ்பெஷல் தான். சென்னை எனக்கு மறுவீடு என்பது போல் உணர்வேன் என தெரிவித்தார். மேலும் உடல் தகுதி குறித்து பேசிய அவர், அடுத்த 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு என் கண்கள் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். ஆனால், எனது உடல் தகுதிக்கு சரியான டிக் கிடைக்கவில்லை. கண்களை வைத்து மட்டும் கிரிக்கெட் விளையாட முடியாது. உடல் தகுதி மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக எம்.எஸ்.தோனி அளித்த பேட்டியில், நான் அதிகாலை 3 மணிக்கு தூங்குவேன். காலை 11.30 மணிக்குள் எழுந்துவிடுவேன் அதன் பிறகு என் பணியை தொடங்குவேன். இதுதான் எனது நேர அட்டவணை. அதைத்தான் இப்போதும் பின்பற்றி வருகிறேன் என தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















