மேலும் அறிய

பாதுகாப்புதான் மொதல்ல; இனி இது கட்டாயம்- 28 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

பள்ளிகளில் மாணவர்கள் நடமாடும் அனைத்து பகுதிகளிலும் அதிக திறன்வாய்ந்த சிசிடிவி கேமராக்களைக் கட்டாயம் பொருத்த வேண்டும்- சிபிஎஸ்இ.

மாணவர்கள் மத்தியில் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களைத் தவிர்க்க, பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய குழுவின் (NCPCR) பரிந்துரையின் அடிப்படையில், இந்த முன்னெடுப்பை சிபிஎஸ்இ நிர்வாகம் எடுத்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ செயலாளர் ஹிமான்ஷு குப்தா அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி உள்ளதாவது:

மாணவர்கள் நடமாடும் பகுதிகளில் அதிக திறன் சிசிடிவி கேமராக்கள்

மாணவர்களுக்கு பள்ளியில் ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நமது கடமை. மாணவர்களின் நலன்கருதி, கழிப்பறை தவிர்த்து, நுழைவாயில், வெளியேறும் வழி, வகுப்பறை, நடைபாதை என பள்ளிகளில் மாணவர்கள் நடமாடும் அனைத்து பகுதிகளிலும் அதிக திறன் கொண்ட சிசிடிவி கேமராக்களைக் கட்டாயம் பொருத்த வேண்டும்.

இதில் எல்லா விதமான துன்புறுத்தல்கள், மனநல, சமூகப் பிரச்சினைகள், வன்முறை, பேரழிவுகள், விபத்துகள், தீ போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும். கிண்டல் அடிப்பது, மாணவர்களுக்கு சுயமரியாதைக் குறைவையும் அவர்களின் நல்வாழ்வு குறித்த தினசரி மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இது சிசிடிவி கேமராக்கள் மூலம் தவிர்க்கப்படும்.

அவற்றை சரியாக பராமரிப்பதோடு, அந்த சிசிடிவி பதிவுகளை சுமார் 15 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

28 ஆயிரம் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

நாடு முழுவதும் சுமார் 28 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் 2 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.  தமிழ்நாட்டில் 580 பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தைப் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே! நடப்புத் தேர்விலேயே 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்குத் தேர்வர்கள் கண்ணீர் கோரிக்கை!
நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே! நடப்புத் தேர்விலேயே 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்குத் தேர்வர்கள் கண்ணீர் கோரிக்கை!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan released : அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு.! தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த நீதிபதி- நடந்தது என்ன.?
அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு.! தவெக அரசுக்கு ஷாக் - நடந்தது என்ன?
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Honda Car Offers: 2.15 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. கார்களுக்கு ஆஃபரை அள்ளித் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.15 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. கார்களுக்கு ஆஃபரை அள்ளித் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Online Automated Patta Transfer : இனி பட்டா மாறுதல்களுக்கு தினமும் அலைய வேண்டாம்.! புதிய நடைமுறை அமல்- என்ன தெரியுமா.?
இனி பட்டா மாறுதல்களுக்கு தினமும் அலைய வேண்டாம்.! புதிய நடைமுறை அமல்- என்ன தெரியுமா.?
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Embed widget