EPS meets Nagendra Sethupathy | ’’எப்போ கட்டுன வீடு?’’ ராஜா வீட்டில் EPS OPS-க்கு பக்கா ஸ்கெட்ச்
ராமநாதபுர சமஸ்தான இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி சமீபத்தில் அதிமுகவில் இணைந்தது கவனம் பெற்றநிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி மன்னரின் வீட்டிற்கே சென்று அவரை சந்தித்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் சமஸ்தானம் சேதுபதி மன்னர்களின் வாரிசும், மறைந்த ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதியின் மகனுமாகிய சமஸ்தான இளைய மன்னர் ராஜா நாகேந்திரன் சேதுபதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது இராமநாதபுரம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் இந்த தொகுதியில் தான் நிற்பார் என எதிர்பார்கபடும் நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் மிகவும் பரிச்சையுமான மன்னர் ராஜா நாகேந்திரன் சேதுபதியை இபிஎஸ் களமிறக்கியுள்ளது ஓபிஎஸ்க்கு நெருக்கடியை எற்படுத்து என சொல்லப்படுகிறது. இதனால் தான் இபிஎஸ் இந்த மாஸ்டர் ப்ளான் போட்டு ஓபிஎஸ் அடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராஜா நாகேந்திர சேதுபதியின் வீட்டிற்கே சென்று அவரை சந்தித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. 2026 தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக தற்போதே தனது ஆட்டத்தை தொடங்கிட்டதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.





















