Coolie : டைம் டிராவல் செய்யும் ரஜினி?.. கூலி படத்தில் ரஜினி - கமல் நட்பு.. இதை கவனிச்சீங்களா?
ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் டிரைலர் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற வசனம் ரஜினி, கமல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. இப்படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்க்கும் ஆவலில் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்துள்ளன. ரசிகர்களை போலவே நானும் அதே எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், கூலி படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் தான் கமல் ரசிகர்களையும் கனெக்ட் செய்துள்ளது.
கூலி டைம் டிராவல் கதையா?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. குறிப்பாக லோகேஷ் இயக்கும் படங்களில் கமல் குறித்த ரெபரன்ஸ் எப்போதும் இருக்கும். கமல் நடிக்காவிட்டாலும் அது கமல் படமாக ரசிகர்களின் மனதில் தோன்ற வைத்துவிடுவார். அந்த வகையில் கூலி படத்தின் டிரைலர் சைன்ஸ் ஃபிக்சன் படமா, இது டைம் டிராவல் படமா என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் படத்தின் இசையமைப்பாளர் அளித்த பேட்டியில், நீங்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். எனவே இப்படம் டைம் டிராவல் கதையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. சத்யராஜ் தனது பழைய நண்பரான தேவாவை இக்கதையில் கொண்டு வருவதுதான் கதையாக இருக்கும் என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஜினி - கமல் நட்பு
அதேபோன்று கூலி படத்தின் டிரைலரில் சத்யராஜ் ரஜினிகாந்தின் நண்பராக நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. படத்தின் ஒரு காட்சியில் சத்யராஜ் தேவாவை பார்த்து (ரஜினிகாந்த்) ஒருத்தனை 30 வருடமாக ஆப்லைனில் வைத்திருக்கிறேன். அவன் மட்டும் வெளியே வந்தா என்ன நடக்கும் என்பதே தெரியாது என்று கூறுகிறார். அதைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசன் ரஜினிகாந்திடம் அவர் உங்களுக்கு நண்பனா இருக்கலாம் ஆனால், எனக்கு அவர் அப்பா எனக் கூறுவார். பின்னர் ரஜினிகாந்த் கொஞ்சம் கோபத்துடன் உனக்கு அப்பாவா இருக்கலாம் ஆனால் அவன் என் நண்பன் என்று கூறுவார். தற்போது ரஜினி கமல் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்கள் கொண்டாட்டம்
திரையுலகில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் ரஜினியும், கமலும் நண்பர்களாக இருக்கின்றனர். இருவருக்கும் இருக்கம் நட்பை பத்தி வார்த்தையால் சொல்ல முடியாது. அண்மையில் ராஜ்யசபா எம்.பி. ஆனதும் கமல்ஹாசன் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு அன்பை பகிர்ந்துகொண்டனர். இந்நிலையில், கூலி படத்தில் இடம்பெற்ற இந்த காட்சியை அவர்களது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.




















