Toll plaza: விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை; புதிய சுங்கச்சாவடி வசூல் தொடங்கியது - கட்டண விவரம் இதோ
விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் கெங்கரம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டண வசூல் தொடங்கியது.

விழுப்புரம்: விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் கெங்கரம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்க கட்டண வசூல் தொடங்கியது.
விழுப்புரம் - நாகை இடையே 194 கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை 6,431 கோடி ரூபாய் பதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி வரை உள்ள 29 கிலோமீட்டர் தொலைவிற்கு கெங்கராம்பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் இன்று முதல் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சாலைப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் எந்தவித முறையான முன்னறிவிப்பும் இல்லாமல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுவது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் நாளிலேயே சுங்கச்சாவடியில் உள்ள சென்சார்கள் சரியாக வேலை செய்யாததால் வானங்கள் தொடர்ந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் வளவனூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுங்க கட்டண விவரம்:
கார், ஜீப், வேன் ஒருமுறை பயணிக்க 60 ரூபாயும், இருமுறை பயணிக்க 90 ரூபாயும், மாதத்திற்கு 1985 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
இலகுரக வணிக வாகனங்கள் ஒருமுறை செல்ல 95 ரூபாயும், இருமுறை சொல்ல 145 ரூபாயும், மாதந்திர கட்டனமாக 3210 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
பேருந்து மற்றும் டிரக் உள்ளிட்ட இரு அட்சிகள் கொண்ட வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 200 ரூபாயும், இரண்டு முறை பயணிக்க 305 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக 6725 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
ஆறு அச்சு கொண்ட வாகனங்கள் வரை ஒரு முறை பயணிக்க 315 ரூபாயும், இருமுறை பயணிக்க 475 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக 10,545 வசூலிக்கப்படுகிறது.
ஏழு அச்சு வாகனங்கள் ஒருமுறை பயணிக்க 385 ரூபாயும், இருமுறை பயணிக்க 580 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக 12,835 வசூலிக்கப்படுகிறது.
வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங்கள் காண மாதாந்திர கட்டணம் 340 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

