Renault Triber Facelift: சந்தைக்கு வந்தது ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட்..! 10 லட்சம்தான்.. இத்தனை சிறப்புகளா?
இந்தியாவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட் கார் இன்று அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக வளர்ந்து வரும் ரெனால்ட் இன்று தங்களது புதிய ரெனால்ட் ட்ரைபர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட் கார் அறிமுகமாக உள்ளதாக அவர்கள் அறிவிப்பு வெளியிட்டது முதலே அந்த காரின் மீது எதிர்பார்ப்பு எகிறியது.
அறிமுகமானது ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட்:
இந்த நிலையில், இன்று இந்தியாவில் ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட் கார் அறிமுகமாகியுள்ளது. ட்ரைபர் காரின் புத்தம் புதிய லோகோவுடன் இந்த கார் அறிமுகமாகியுள்ளது. 5 வேரியண்ட்களில் இந்த புதிய மாடல் அறிமுகமாகியுள்ளது.
ஆதண்டிக், எவாலுயூசன், டெக்னோ, எமோஷன் மற்றும் எமோஷன் ஏஎம்டி ஆகிய 5 வேரியண்ட்களில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் ஷேடோ கிரே, ஆம்பர் டெர்ரகொடா மற்றும் ஜான்ஸ்கர் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகமாகியுள்ளது.

விலை என்ன?
ஆதாண்டிக் - ரூபாய் 6.29 லட்சம்
எவாலுயூசன் - ரூபாய் 7.24 லட்சம்
டெக்னோ - ரூபாய் 7.99 லட்சம்
எமோஷன் - ரூபாய் 8.64 லட்சம்
எமோஷன் ஏஎம்டி - ரூபாய் 9.16 லட்சம்
காரின் சிறப்பம்சங்கள் என்ன?
இந்த காரின் எஞ்ஜின் 999 சிசி திறன் கொண்டது ஆகும். 1 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் வடிவத்தில் எஞ்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் 71 பிஎச்பி குதிரை திறன் கொண்டது ஆகும். 96 என்.எம். டார்க் திறன் கொண்டது இந்த கார் ஆகும்.
இந்த புதிய ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட் ஆட்டோமெட்டிக் கியர் மற்றும் மேனுவல் கியராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் 5 கியர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் சிஎன்ஜி வடிவத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார் மொத்தம் 3990 மிமீ நீளமும், 1739 மிமீ அகலமும், 1643 மி.மீட்டர் உயரமும் கொண்டது ஆகும். இந்த காரின் அலாய் சக்கரங்கள் 2636 மி.மீட்டர் கொண்டது ஆகும். காரின் பெட்ரோல் டேங்க் 40 லிட்டர் தாங்கும் திறன் கொண்டது ஆகும். ஒரு பெரிய குடும்பத்தினர் அமர்ந்து செல்லும் வகையில் 7 சீட்டுகள் இந்த காரில் உள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள ரெனால்ட் ட்ரைபர் டீலர்கள் மூலமாக இந்த கார் விற்பனைக்கு வருகிறது. 3 ஆண்டுகள் வாரண்டி மற்றும் ஒரு லட்சம் கிலோ மீட்டர் திட்டமும் இந்த புதிய ட்ரைபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிமுகப்படுத்த ரெனால்ட் ட்ரைபர் சந்தைக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த காரில் இருந்த மெக்கானிக் அம்சங்கள் அப்படியே இந்த காரில் எந்த மாற்றமும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. காரின் முகப்பு விளக்குகள் பழைய மாடலில் இருந்ததை காட்டிலும் வசீகரமாக மாற்றப்பட்டுள்ளது. காரின் கேபினில் டேஷ்போர்ட் பழைய காரை காட்டிலும் புதிய மாடலில் பெரியதாகவும், ஏராளமான வசதிகளுடனும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திரை 8 அங்குலத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் முந்தைய காரை காட்டிலும் இதில் அதிகளவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





















