(Source: ECI/ABP News/ABP Majha)
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு...!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை பாதுகாக்க குழு அமைத்து தலைமை ஆசிரியர்கள் உற்றுநோக்கல் வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகள்
- இருசக்கர வாகனம் திருடிய 2 வாலிபர்கள் கைது:-
செஞ்சி அருகே கடலாடிகுளம் கூட்டுரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கள்வாசல் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 22), முனிவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் மணிவண்ணன் (24) ஆகியோர் என்பதும், இதுவரை 7 மோட்டார் சைக்கிள்களை திடியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.
- விழுப்புரம் மருதூர் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 390 வீடுகளை அகற்றும் பணி:-
விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வி.மருதூர் ஏரி. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி 114 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த ஏரியை ஆக்கிரமித்து சின்னப்பா நகரில் 109 பேரும், மணி நகரில் 39 பேரும், இந்திரா நகரில் 88 பேரும், ராஜீவ்காந்தி நகரில் 60 பேரும், பெருமாள் நகரில் 37 பேரும், காளியம்மன் நகரில் 38 பேரும், பிள்ளையார் கோவில் தெருவில் 19 பேரும் ஆக மொத்தம் 390 பேர் வீடு கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதி நாளுக்கு நாள் சுருங்கி தற்போது வெறும் 70 ஏக்கர் பரப்பளவு மட்டுமே ஏரி உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 390 வீடுகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி தொடங்கி நடைபெற்றது. பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
3. கஞ்சா, போதைப்பொருள் விற்பனை குறித்து 'வாட்ஸ்-அப்' மூலம் புகார்:-
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனை செய்தால், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் மாணவர்களுக்கு யாரேனும் கஞ்சா, போதைப்பொருட்களை விற்பனை செய்தால் அவர்களை பற்றிய தகவல்களை உடனடியாக 94981 11103 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் தகவல் தெரிவிக்கும்படியும், அவ்வாறு தெரிவிக்கும்பட்சத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி.
- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை பாதுகாக்க குழு :-
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி ஆணையர், இணை இயக்குனர்கள் வருகிற 10, 11 ஆகிய தேதிகளில் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதால் பள்ளிகள் அனைத்துவித செயல்பாடுகளிலும் (கற்றல், கற்பித்தல் பணி, பள்ளி வளாகம் தூய்மை, கழிவறை தூய்மை உள்ளிட்ட பணிகள்) தயார் நிலையில் இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் இருந்து அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்க வரும் மாணவர்களுக்கு போதிய பஸ் வசதி உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். பஸ் வசதி பற்றாக்குறை இருப்பின் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் மூலம் போக்குவரத்துத்துறையை தொடர்புகொண்டு பஸ் வசதியை தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். மழைக்காலம் தொடங்க உள்ளதால் பள்ளிகளில் உள்ள மரங்களில் தேவையற்ற கிளைகளை களைந்து மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்தல் வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கான குழுவை அமைத்திருத்தல் வேண்டும். தலைமை ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 வகுப்புகளை உற்றுநோக்கல் வேண்டும்.
அனைத்து வகுப்புகளிலும் சரியான முறையில் கற்றல் கற்பித்தல் பணி நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் உரிய நேரத்திற்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வரவில்லையெனில் தலைமையாசிரியர்கள் உடனடியாக அம்மாணவர்களின் பெற்றோரை தொடர்புகொண்டு உரிய ஆலோசனை வழங்கி அம்மாணவர்களை தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கு வருகைபுரிந்த மாணவர்கள், தேவையில்லாமல் வெளியில் செல்கிறார்களா என்பதை உடற்கல்வி ஆசிரியர்கள், பொறுப்பாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளியின் நுழைவுவாயிலை பாதுகாப்பு கருதி பூட்டி வைத்திடல் வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பான முடித்திருத்தம், முறையான சீருடையில் பள்ளிக்கு வருகைப்புரிவது குறித்து உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்