மேலும் அறிய

அதிமுகவை தொடர்ந்து விஜய்க்கும் அழைப்பு விடுத்த திருமாவளவன் - தமிழக அரசியலில் நடப்பது என்ன?

தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ள விஜய்யும் விசிக மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம் - திருமாவளவன் எம்பி

விழுப்புரம்: மது ஒழிப்பிற்கு அறை கூவல் விடுப்பது மதுவை ஒழிக்க மட்டுமே, இது 2026 வது ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி இல்லை, அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு மதுக்கடைகளை வைத்து கொண்டு அதன் வருமானத்தை கொண்டு அரசு ஆட்சி நடத்துவது என்று கூறுவது ஏற்புடையதல்ல என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

தியாகி இமானுவேல் சேகரன் 67வது ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இமானுவேல் சேகரன் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் அமைக்க சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டதில் மணி மண்டபம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மது போதை ஒழிப்பு மாநாடு 

மது, போதை பொருள்களை ஒழிக்க காலங்காலமாக போராடி வருவதாகவும், பெளத்தத்தை தழுவியர்களில் 22 கொள்கைகளில் மதுவை தொட கூடாது என்பது ஒன்று மது ஒழிப்பு போராட்டம் என்பது தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது, மதுவை ஒழிக்க மகளிரின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதால் மது போதை ஒழிப்பு மாநாடு நடத்துவதாகவும் கட்சி அரசியல் என்பது வேறு, சமூக மக்கள் நலன் சார்ந்த அரசியல் வேறு, மதுவை ஒழிக்க அனைவரும் எங்களுடன் போராட வேண்டும். 

மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும் 

மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டியுள்ளதால் அனைவரும் இணைந்து மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற வேண்டுமென வலியுறுத்தினார். திமுகவிற்கும், அதிமுகவிற்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துள்ள போது படிப்படியாக ஏன் தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரஇயலாது என்றும் இந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு போன்றவைகளில் தமிழகம் முதன்மையானவையாக இருக்கும் போது தமிழகம் ஏன் மது ஒழிப்பில் முதன்மையானவையாக இருக்க கூடாது என கேள்வி எழுப்பினார். 

ஒரு கட்சியின் கோரிக்கையாக பார்க்க வேண்டாம்

மது ஒழிப்பிற்கு அறை கூவல் விடுப்பது மதுவை ஒழிக்க மட்டுமே இது 2026 வது ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி இல்லை அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு என்று திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். மதுக்கடைகளை வைத்து கொண்டு அதன் மூலம் வருமானத்தை கொண்டு அரசு ஆட்சி நடத்துவது என்று கூறுவது ஏற்புடையதல்ல மக்களுடைய கோரிக்கையை தான் முன் வைப்பதாகவும் அது ஒரு கட்சியின் கோரிக்கையாக பார்க்க வேண்டாம் எல்லோரும் கை கோர்த்தால் தான் முடிவு எட்டப்படும் கள்ளச்சாராயம் புழக்கம் இன்னும் இருக்கிறது பள்ளி வரை போதை பொருள் பழக்கம் உள்ளது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அனைத்தும் போதை பொருட்களில் அடிமையானவர்களால் நடைபெற்றுள்ளது.

பாஜகவும் பாமகவிற்கு தான் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை

போதை என்பது அமைதியாக நடைபெறுகிற பேரழிவு சாதாரண மக்கள் சாராயக்கடைகளை மூடினாலே நல்லது நடக்கும் என பொதுமக்கள் நம்புவதாகவும், தேர்தல் அரசியல் மற்றும் கூட்டணி அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டினை முடிச்சி போட வேண்டாம் என்றும் இது எல்லோரும் இருக்கிற மது ஒழிப்பு மாநாடு என கூறினார். கூட்டணியில் இருந்தாலும் நல்ல பிரச்சனைகள் இருந்தால் எதிர்த்து போராடுவோம் அதன்படி அதிமுக மது ஒழிப்பு மாநாட்டிற்கு வந்து மேடையில் பேசலாம். பாஜகவும் பாமகவும் விற்கு தான் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை அவர்கள் மதவாத சாதியவாத கட்சி என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எப்போதும் அவர்களுடன் இணைய மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். 

தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ள விஜய்யும் இந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம். தமிழகம் கல்வி கொள்கையில் சிறந்து விளங்குவதாக கொள்கை எதிரிகளாக உள்ள பாஜக அமைச்சரே தெரிவிப்பதால் கல்வி சிறப்பாக தமிழகத்தில் இருபது தான் காரணம் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Embed widget