விஜய்க்காக சென்னை வந்த வருண்குமார் ஐபிஎஸ்? சிபிசிஐடியின் டிஐஜி ஆக நியமனம் - திமுக போட்ட ஸ்கெட்ச்
Varunkumar IPS : திருச்சி சரக டிஐஜி ஆக இருந்த ஐபிஎஸ் அதிகாரியான வருண் குமாரை, சிபிசிஐடி பிரிவின் டிஐஜி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Varunkumar IPS : ஐபிஎஸ் அதிகாரியான வருண் குமார் சென்னைக்கு மாற்றப்பட்டதில் திமுகவின் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
வருண்குமார் ஐபிஎஸ் பணியிட மாற்றம்:
தமிழ்நாடு அரசு நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விஜிலென்ஸ் பிரிவின் டிஜிபி ஆக இருந்த ப்ரமோத் குமார், ஹோம் கார்ட் பிரிவு டிஜிபி ஆக இருந்த ஜெயஸ்ரீ, குற்ற ஆவணங்கள் பிரிவு கூடுதல் டிஜிபி ஆக இருந்த ஆயுஷ் மணி திவாரி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோக, திருச்சி சரக டிஐஜி ஆக இருந்த வருண் குமார் ஐபிஎஸ், சென்னையில் சிபிசிஐடி பிரிவின் டிஐஜி ஆகிய நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை மாநகர கவால்துறையில் முக்கிய பதவியில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.
சர்ப்ரைஸ் லிஸ்டில் வருண் குமார்:
கடந்த ஜுலை மாத வாக்கில் ஐஜி மற்றும் டிஐஜி அந்தஸ்தில் இருந்த 30-க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், அதில் வருண் குமாரின் பெயர் மட்டும் இடம்பெறாமல் இருந்தது. சென்னையில் ஒரு வலுவான பதவியில் அவரை அமர வைக்க அரசு திட்டமிடுவதாகவும், அதற்காகவே அவரது பெயர் அபோதைய பட்டியலில் இல்லை என்றும் கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே, சென்னை பிரிவில் காலியாக இருந்த சிபிஐசிஐடியின் டிஐஜி பதவியில் வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் அல்லது சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் பதவி அவருக்கு வழங்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால், தற்போது மற்றொரு முக்கிய பதவியன குற்றப்பிரிவு டிஐஜி ஆக நியமிக்கப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுகவின் ஸ்கெட்ச்?
திருச்சியில் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தபோது மிகவும் பிரபலமான வருண்குமார், டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்ற பிறகும் கூட, மீண்டும் அதே சரகத்தில் பணியமர்த்தப்பட்டார். ஆளுங்கட்சியான திமுகவிற்கு நெருக்கமானவராகவும் கருதப்படுகிறார். இந்நிலையில் தான், தீவிர ஆலோசனைக்குப் பிறகு, வருண் குமார் சென்னை பிரிவுக்கு கொண்டு வரப்பட்டதில் ஆளும் தரப்பின் பல்வேறு கணக்கீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
TVK-விற்கு எதிராக பிளான்?
லாக்கப் மரணங்களுக்கு எதிராக சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையால் இறந்ததாக கூறப்படும் 24 பேரின் குடும்பங்களை மேடையில் ஏற்றி விஜய் பேசியது திமுகவில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விஜயின் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கட்டை போடும் விதமாக சில வியூகங்களை காவல்துறை மூலம் திமுக அரசு மேற்கொள்ளப்பவதாகவும், அதனை கனக்கச்சிதமாக வருண்குமார் செய்வார் என்பதால் சென்னையில் அவருக்கு முக்கிய போஸ்டிங் போடப்பட்டுள்ளதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையா என்பது, எதிர்வரும் காலங்களில் வருண்குமாரின் செயல்பாடுகள் மூலமே தெரியவரும்.





















