Auroville: அரவிந்தரின் நூற்றாண்டு விழா; 16 கிராம இளைஞர்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டி
ஆரோவில் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற மக்களிடையே மனித ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அறக்கட்டளை சார்பில், 78வது சுதந்திர தின விழா மற்றும் அரவிந்தரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி மொரட்டாண்டி பல்மைரா கிரிக்கெட் மைதானத்தில, கடந்த 15ம் தேதி முதல் 17 வரையில் நடந்தது. போட்டியில் 16 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் விளையாடினர். இறுதிப்போட்டியில், கலைவாணன் நகர் அணி மற்றும் ராவுத்தன்குப்பம் அணியும் மோதின. இதில், கலைவாணன் நகர் அணி முதலிடத்தையும், ராவுத்தன்குப்பம் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
இந்த நிகழ்வில் ஆரோவில் இளைஞர்களின் முன்முயற்சியில், சுற்றுப்புற பதினாறு கிராமப்புறங்களை சேர்ந்த இளைஞர்களுக்கும் ஆரோவில் இளைஞர்களுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதற்கும், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் நோக்கமாக இந்த விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் இணைந்து இந்திய அரசு மற்றும் யோகி அரவிந்தரின் கனவான 'வசுதேவ குடும்பத்தை' முன்னிறுத்தி போட்டியை நடத்துகின்றனர்.
இந்த விழாவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஸ்வர்ணம்பிகா ஐபிஎஸ், இந்த போட்டி ஆரோவில் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற மக்களிடையே மனித ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆரோவில் அறக்கட்டளை துணை செயலர் மற்றும் இயக்குனர் ஸ்வர்ணம்பிகா IPS, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். போட்டியின் வெற்றியாளராக கலைவாணர் நகர் அணி தேர்வு செய்யப்பட்டு, ரூ.20,000/- பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பிடித்த ராவ் தாம்குப்பம் அணிக்கு ரூ.10,000/- பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் பங்கேற்ற மற்ற 14 அணிகளுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.5,000/- வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.