மேலும் அறிய

New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை

New Compact SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள 5 புதிய காம்பேக்ட் எஸ்யுவிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

New Compact SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாக உள்ள 5 புதிய காம்பேக்ட் எஸ்யுவிகள் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

காம்பேக்ட் எஸ்யுவி கார்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடும் போட்டி நிலவும் பிரிவுகளில், காம்பேக்ட் எஸ்ய்வி குறிப்பிடத்தக்கதாகும். எஸ்யுவி கார்களுக்கான நுழைவுப்புள்ளியாக இருப்பதோடு, அதிகப்படியான கிரவுண்ட் கிளியரன்ஸ், தரமான இருக்கை வசதிகள், பரவலான இடவசதி, வலுவான பவர் ட்ரெயின் மற்றும் அணுகக் கூடிய விலைகள் மக்கள் காம்பேக்ட் எஸ்யுவியை நாட அதிக ஆலோசனைகளை வழங்குகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள 5 புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இது அந்த பிரிவில் உள்ள போட்டித்தன்மையை மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

1. புதிய தலைமுறை ஹுண்டாய் வென்யு

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹுண்டாயின் அடுத்த தலைமுறை எடிஷனின், சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகியுள்ளன. நடப்பாண்டு இறுதியில் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாம் தலைமுறை வென்யு கார் மாடலானது, முற்றிலும் புதிய வெளிப்புற வடிவமைப்பை பெற உள்ளது. முன்புறமானது கிரேட்டா அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது.  4 மீட்டருக்கு குறைவான நீளத்தை கொண்டுள்ள இந்த காரானது, குவால் எல்இடி முகப்பு விளக்குகளுடன் இணைக்கப்பட்ட எல்இடி DRL-களை கொண்டுள்ளது. அதேநேரம் இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யாமல், ஏற்கனவே உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் tGDI பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் CRDi ஆப்ஷன்கள் அப்படியே தொடர்கிறது. இதன் விலை சென்னையில் தற்போது ரூ.9.24 லட்சம் முதல் ரூ.13.62 லட்சமாக உள்ளது. இரண்டாம் தலைமுறை காரின் விலை புதிய அப்டேட்களால் கணிசமாக உயரக்கூடும்.

2. மஹிந்திரா XUV3XO EV

மஹிந்திராவின் XUV3XO மின்சார கார் மாடலும் இறுதி வடிவம் பெற்று, சாலையில் சோதனை மேற்கொண்டபோது பலரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. நடப்பாண்டு இறுதியில் இந்த கார் அறிமுகப்படுத்தக்கூடும். S240 என்ற கோட்நேம் கொண்ட இந்த கார், இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் மற்றும் கியா சைரோஸ் போன்ற மின்சார கார் மாடல்களுடன் போட்டியிடும். மின்சார வாகனம் என்பதற்கான தனித்துவமான சில வடிவமைப்புகளை கொண்டிருந்தாலும், இதன் முழுமையான வடிவமைப்பானது  இன்ஜின் அடிப்படையிலான XUV3XO எடிஷன் உடன் பகிர உள்ளது. XUV400 மாடலில் உள்ள 34.5 KWh மற்றும் 39.4 KWh ஆகிய பேட்டரி ஆப்ஷன்களை புதிய கார் பின்பற்றும் என கூறப்படுகிறது. இது 375 முதல் 456 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது. இதன் விலை சுமார் 15 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. டாடா பஞ்ச் ஃபேஸ்லிப்ஃட்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யுவி ஆன டாடா பஞ்ச்சின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. சோதனை ஓட்ட புகைப்படங்களின் அடிப்படையில் பார்த்தால், புதிய எடிஷனின் வெளிப்புறமானது பஞ்ச் காரின் மின்சார எடிஷனின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. உட்புறத்திலும் இதே பாணியே தொடரும் என கூறப்படுகிறது. கூடுதலாக உட்புறத்தில் பெரிய 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட்  சிஸ்டம் மற்றும் முற்றிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் இடம்பெறலாம். இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இன்றி சிஎன்ஜி உடன் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் ஆப்ஷனே தொடரும் என கூறப்படுகிறது. தற்போதைய பஞ்ச் காரானது ரூ.7.43 லட்சம் முதல் ரூ.12.82 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இது லிட்டருக்கு 18 முதல் 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

4. ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட்:

கைகர் கார் மாடலின் ஃபேஸ்லிப்ஃட் எடிஷன் நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அப்டேடட் வெர்ஷனானது  புதிய முகப்பு விளக்குகள், பம்பர்கள், டெயில் லைட் மற்றும் புதிய அலாய் வீல்கள் உள்ளிட்ட சில லேசான மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. கூடுதலாக, இந்த கார் அறிமுகத்தின் போது, நிறுவனத்தின் புதிய லோகோவையும் வெளியிட ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். காரின் உட்புறத்தில், சில கூடுதல் அம்சங்களுடன் டேஷ்போர்டின் லே-அவுட் திருத்தப்படலாம். 1.0 லிட்டர் NA பெட்ரோல், 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்கிறது. தற்போதைய எடிஷனின் விலை ரூ.7.24 லட்சத்தில் தொடங்கி, ரூ.13.84 லட்சம் வரை நீள்கிறது. லிட்டருக்கு 17 முதல் 20 கிமீ வரை மைலேஜ் நீள்கிறது.

5. மாருதி சுசூகி ஃப்ராங்ஸ் ஹைப்ரிட்

மாருதி நிறுவனம் தனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட HEV  சீரிஸ் ஹைப்ரிட் பவர்ட்ரெயினை, ஃப்ராங்ஸ் ஃபேஸ்லிஃப்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அப்டேட் செய்யப்பட்ட இந்த கிராஸ் ஓவர் காரானது, நடப்பாண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். இதில் ஹைப்ரிட் சிஸ்டம் மட்டுமின்றி, திருத்தப்பட்ட வெளிப்புற டிசைன், புத்துயிர் பெற்ற உட்புறம் மற்றும் கூடுதல் அம்சங்கள் இணைக்கப்படலாம் என கூறப்படுகிறது. YTB என்ற கோட்நேம் மூலம் அறியப்படும் இந்த காரானது அதே 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் இன்ஜினை தொடர்கிறது. புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் மூலம், எரிபொருள் திறன் அதிகரித்து லிட்டருக்கு 30 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போதைய எடிஷனானது வேரியண்ட் அடிப்படையில் லிட்டருக்கு 20 முதல் 28 லிட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது. இதன் விலை ரூ.7.54 லட்சம் முதல் ரூ.13.06 லட்சம் வரை நீள்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Embed widget