மேலும் அறிய
Advertisement
அதிர்ச்சி வீடியோ; பாம்பை கொன்று கறியாக்கி சாப்பிட்ட வாலிபர் - எப்படி மாட்டினார் தெரியுமா?
திருப்பத்தூர் அருகே சாரை பாம்பை கொன்று தோல் உரித்து கறியாக்கி சாப்பிட்ட வாலிபர் கைது! சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட வாலிபர்
திருப்பத்தூர் அருகே சாரை பாம்பை கொன்று தோல் உரித்து கறியாக்கி சாப்பிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்ததன் மூலம் அவரே சிக்கிக்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் (30). இவர் நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.
திருப்பத்தூர் அருகே சாரை பாம்பை கொன்று தோல் உரித்து கறியாக்கி சாப்பிட்ட ராஜேஸ் என்ற இளைஞர் கைதுhttps://t.co/wupaoCzH82 | #Snake #Tirupathur #TamilNews pic.twitter.com/JnNsTKeQrI
— ABP Nadu (@abpnadu) June 12, 2024
இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின்படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் வானவர் மற்றும் வனப் பணியாளர்கள் இந்த வீடியோ வைத்து விசாரணை மேற்கொண்டு பெருமாபட்டு கிராமத்திற்கு சென்று ராஜ்குமாரை கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் சாரை பாம்பை தோல் உரித்து அதனை சமைத்து கரியாக்கி சாப்பிட்டதும் தெரிய வந்தது. இதன் காரணமாக திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion