மேலும் அறிய

மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது உடனடிநடவடிக்கை - திருச்சி காவல் ஆணையர் உத்தரவு

பொதுமக்களில் இருந்து பெறப்படும் புகார் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநகர காவல் துறை ஆணையர் காமினி உத்தரவு

திருச்சி மாநகர காவல் துறை ஆணையாக காமினி பொறுப்பு ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக மாணவர் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மாநகர் பகுதியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள வருகை பதிவேடு மற்றும் புகார் அளிக்கும் பொதுமக்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். மேலும் பெறப்படும் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை கால தாமதம் படுத்தாமல் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக குற்ற சம்பவங்களை ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழஙகினார். 

இந்நிலையில் பெறப்படும் புகார் மனுக்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்த நிலையில், வாரந்தோறும் காவல்துறை சார்பாக மக்கள் குறைத்திருக்க கூட்டம் நடத்தப்படும் என காவல்துறை ஆனையார் காமினி தெரிவித்தார். அதன்படி கடந்த சில மாதங்களாக வாரந்தோறும் பொது மக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக முகாம் உங்கள் நடத்தப்பட்டு அதில் பெறப்படும் அணுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது உடனடிநடவடிக்கை - திருச்சி காவல் ஆணையர் உத்தரவு

இதனை தொடர்ந்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில் ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் அன்மையில் நடந்த  பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கே.கே.நகா் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் காமினி முகாமிற்கு தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த 26 மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது தீர்வுகாண அறிவுறுத்தினார்.மேலும் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வா் முகாம், முதலமைச்சாின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமை இயக்குநாிடம் நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 432 மனுக்களில், 290 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 142 மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 11 பழைய மனுக்களில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரித்து உடனடியாக தீர்வு காணப்பட்டது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த 373 மனுக்களில் 128 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டு மீதம் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இம்முகாமில், போலீஸ் துணை கமிஷனர் தெற்கு மற்றும் வடக்கு, காவல் சரக உதவி கமிஷனர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE:நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Breaking News LIVE: நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Embed widget