மேலும் அறிய

TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்

TNPSC Question Paper Controversy: தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தை அறிமுகம் செய்ததால் முதல்வரை மக்கள் தாயுமானவர் என அழைக்கின்றனர்? என்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. 

தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தை அறிமுகம் செய்ததால் முதல்வரை மக்கள் தாயுமானவர் என அழைக்கின்றனர்? என்று டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்த நிலையில், சர்ச்சை வெடித்துள்ளது.

குரூப் 2, 2 ஏ தேர்வு

மாநிலம் முழுவதும் குரூப் 2 தேர்வு மூலம் சுமார் 61 வகையான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள 2,327 பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் நேற்று முன்தினம் (பிப்.8) நடைபெற்றன.

முன்னதாக, குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடந்தது.  இந்த தேர்வுகளுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்த நிலையில், 2.5 லட்சம் பேர் தேர்வை எழுதவில்லை .

21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டி

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் 12ஆம் தேதி வெளியான நிலையில், முதன்மைத் தேர்வு பிப்.8ஆம் தேதி நடந்தது. முற்பகலில் நடந்த இரண்டாம் தாளில் பொது அறிவு மற்றும் பொதுத் திறனறிவுத் தேர்வுகள் நடைபெற்றன. பிற்பகலில் முதல் தாளான தமிழ் மொழி தகுதித் தேர்வு நடைபெற்றது. இதற்காக 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சுமார் 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வில், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.


TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்

இதில் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் எந்தத் திட்டத்தை அறிமுகம் செய்ததால் முதல்வரை மக்கள் தாயுமானவர் என அழைக்கின்றனர்? என்று 88ஆவதாக ஒரு கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இதற்கான விடைகளாக, பள்ளியில் காலை உணவு, விடியல் பயணத் திட்டம், நீங்கள் நலமா? மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட தெரிவுகள் கொடுக்கப்பட்டு இருந்தன.

வெடித்த சர்ச்சை

இதற்கு நெட்டிசன்களும் பாஜகவினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எக்ஸ் பதிவில் ஒரு பதிவர் தனது பதிவில், ’’TNPSC குரூப் 2A தேர்வில் தமிழ்நாட்டில் முதல்வரை தாயுமானவர் என்று அழைக்கக் காரணமான திட்டம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வுகள் என்பது தேர்வு எழுதுபவர்களின் அடிப்படைத் திறன்களைக் கண்டறியவா அல்லது திராவிட மாடலை விளம்பரப்படுத்தவா என்பது மிகப்பெரும் சந்தேகம்.

முதல்வரை திருப்திப்படுத்தவா?

இது போன்ற கேள்விகளால் முதல்வரை திருப்திப்படுத்த வேண்டுமென்று தேர்வு ஆணையம் நினைக்கிறதா? அல்லது இது போன்ற கேள்விகளை அரசே கட்டாயமாக்கி இருக்கிறதா? இனி வரும் தேர்வுகளில் முதல்வர் அல்வா சாப்பிட்ட கடையின் பெயர் என்ன என்பது கேள்வியாக்கப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை.

இது போன்ற கேலிக் கூத்து விளம்பரங்களால் நிர்வாக சீர்கேடுகள் மறைந்து விடுவதில்லை என்பதை அறிவால் உணர்ந்து கொண்டு சிறுபிள்ளைத்தனமான முயற்சிகளைக் கைவிட்டு தமிழ்நாட்டுப் பிரச்சனைகளில் கவனம் செலுத்த அரசு முயலுமா என்பது சந்தேகமே!’’ என்று சாடி உள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு கணக்காளர் பணி! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
மருத்துவக் கனவு நனவாகும்; மாணவர்களுக்கு நற்செய்தி! 20 ஆயிரம் மருத்துவ இடங்கள்; 43 மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல்  
மருத்துவக் கனவு நனவாகும்; மாணவர்களுக்கு நற்செய்தி! 20 ஆயிரம் மருத்துவ இடங்கள்; 43 மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல்  
தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
தேர்தல் வரப்போகுது! பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் வாக்குறுதி என்னாச்சு? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்!
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
NEET UG 2026: நீட் தேர்வு 2026: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ அவகாசம் - எதையெல்லாம் மாற்றலாம்?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
TN Election 2026: திமுகவின் கஞ்சத்தனம்.. கையில் புரளும் தொகுதிகள், ஜாக்பாட் விசிக? தேமுதிக? கமல், கம்யூ.,?
Ration Shop Employees : கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கடைசி நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
TN Government Employees : இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்.! தமிழக அரசு முக்கிய உத்தரவு- காரணம் என்ன.?
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
TVS Orbiter V1: 50 ஆயிரத்துக்கே வந்தாலும்... டிவிஎஸ் ஆர்பிட்டருக்கு டஃப் கொடுக்கும் 4 EV ஸ்கூட்டர்கள் - ரேஞ்ச், மாடல்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
Crime: சட்டியில் இருந்த மீன் எங்க? நண்பனை அடித்தே கொன்ற கொடூரம் - கடைசியில் வந்த மெகா ட்விஸ்ட்
ADMK EPS : ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
ஓபிஎஸ்யிடம் இருந்து அதிமுகவிற்கு பல்டி அந்த 2 நிர்வாகிகள்.! முக்கிய பதவியை தூக்கி கொடுத்த இபிஎஸ்
Embed widget