Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?
விஜய் சுற்றுப்பயணத்தின் போது அவர் மீது அழுகிய முட்டையை வீசுவோம் என்று ரஜினி ரசிகர்கள் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோவால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நடிகர் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே யார் அதிகம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ட் செய்வது. யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர் என்ற சண்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பாக ரஜினி ஒரு கதை சொல்ல,அதற்கு பதிலடியாக விஜய் ஒரு குட்டி ஸ்டோரி சொல்ல இப்படி இந்த பிரச்சனை நீண்டகாலமாக இருக்கிறது. இச்சூழலில் தான் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல், தன்னுடைய கடைசி படமான ஜன நாயகன் திரைப்படத்திலும் நடத்தி வருகிறார். இந்த படத்தின் படப்படிப்பு முடிந்தப் உடன் வரும் மார்ச் மாதம் தமிழ் நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த நிலையில் தான் சோசியல் மீடியாவில் ரஜினி ரசிகர்கள் பேசியதாக ஒரு ஆடியோ ஒன்று வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த ஆடியோவில் பேசிய ஒருவர் விஜய்யை ஒருமையில் விமர்சித்துவிட்டு, மளிகை கடையில் ஒரு முட்டை ரூ.6.50க்கு விற்பனையாகிறது; நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து ஒரு அக்கவுண்ட் தொடங்குவோம்; நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விலைக்கே முட்டைகளை வாங்குவோம்; அதுவும் அழுகிய முட்டை எனில் ரூ.1.50தான் வரும். விஜய் சுற்று பயணம் வரும் போது சரமாரியாக வீசுவோம்.. என்று கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சூழலில், அவர் மீது அழுகிய முட்டையை வீசுவோம் என்று பேசிய உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது எக்ஸ் ஐடியில் ரஜினியின் முகப்பு படமும், ரஜினியை புகழ்ந்து பேசியும், விஜயை இகழந்தும் பல பதிவுகள் இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் ரஜினி ரசிகர்கள் தான் என்றும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவெக தொண்டர்கள் கொந்தளித்து வருகின்றனர்.





















