மேலும் அறிய
Advertisement
ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட தலா 500 கிலோ மா, வாழை: அதிகாரிகளின் அதிரடி முடிவு
திருவண்ணாமலையில் 15 பழமண்டியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் செயற்கையாக ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழம் மற்றும் 500 கிலோ வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.
செயர்கையாக பழுக்க வைக்கும் 500 கிலோ வாழைப்பழம் பறிமுதல்
திருவண்ணாமலை நகரில் உள்ள பல்வேறு பழ மண்டிகளில் மாம்பழங்கள் மற்றும் வாழைப்பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைக்கின்றது. இதன் அடிப்படையில் இன்று காலை முதல் தேரடி வீதி, திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நான்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் திருமஞ்சன கோபுர வீதியில் உள்ள பழ மண்டியில் எத்தனால் சொல்யூஷன் பயன்படுத்தி வாழைப்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதை கண்டறிந்தனர். குறிப்பாக இதுபோன்று பழங்கள் பழுக்க வைக்கப்படுவதால் இதனை உட்கொள்ளும் போது வயிறு உபாதைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
செயற்கையாக பழுக்க வைக்கும் 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
இது மட்டுமின்றி தேரடி வீதியில் உள்ள மாம்பழ மண்டியில் சோதனை செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எத்தனால் பவுச் என்று சொல்லக்கூடிய வேதிப்பொருளை வைத்து மாம்பழம் பழுக்க வைக்கப்படுவதை கண்டறிந்தனர். குறிப்பாக இதுபோன்ற மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதால் மாம்பழம் முழுவதுமாக நச்சுத்தன்மை உள்ளதாக மாறும் எனவும், இதனால் இதனை உண்ணும் போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தொடர்ந்து இதுபோன்ற வேதிப்பொருள் வைத்து பழுக்க வைக்கப்படும் உணவுப் பொருட்களால் இதனை உண்ணும் போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன்
இயற்கையாக பழுக்க வைக்கப்படும் பழங்களுக்கும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களுக்கும் உள்ள வேறுபாட்டினை எடுத்துரைத்தார். இது போன்று பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவதால் பழத்தின் தன்மையும் அதனுடைய சத்தும் முழுவதுமாக கெட்டுப் போய் பல்வேறு மனிதர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இன்று காலை முதல் 15 இடங்களுக்கு மேல் பழமண்டிகளில் ஆய்வு மேற்கொண்டு செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் மற்றும் 500 கிலோ வாழைப்பழங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடையின் மீது வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், இந்த சோதனை அனுதினமும் தொடரும் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.இந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுவதுபோன்று தினந்தோறும் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் இப்படி பொதுமக்களின் உயிருடன் விளையாடும் இதுபோன்ற பழமண்டி உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் ஆத்திரத்துடன் பேசுகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion