மேலும் அறிய

விலை அதிகமாக இருந்தா என்ன? ஆர்வத்துடன் தஞ்சை மக்கள் வாங்குவது எதை தெரியுங்களா?

நாட்டுப்பூண்டும் சரி, மலைப்பூண்டும் சரி தற்போது அதிக விலையில்தான் விற்கப்படுகிறது இருந்தாலும் நாட்டுப்பூண்டை விட மலைப்பூண்டு விலை குறைவாக உள்ளது.

தஞ்சாவூர்: கிலோ ரூ.300க்கு விற்கப்பட்டாலும் மலைப்பூண்டை தஞ்சை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். விலை அதிகம் இருந்தால் என்ன உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் என்பதால் வாங்கிச் செல்வதாக தெரிவித்தனர்.

தஞ்சையில் லோடு ஆட்டோக்களில் ஒரு கிலோ மலைப்பூண்டு ரூ. 300க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி செல்கின்றனர்.

தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் பூண்டு குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகின்றது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில் பூண்டு ஒரு பணப்பயிராகும். இதனால் அங்கு சாகுபடி செய்யப்படும் பூண்டு நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் தேனி, கம்பம், குமுளி உட்பட ஒரு சில பகுதிகளில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூண்டு மருந்தாகவும், வாசனை பொருளாகவும் பயன்படுகிறது. பூண்டில் ஏராளமான நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. பூண்டில் அதிகப்படியான வைட்டமின் சத்துகளும், தாதுக்களும் இருக்கின்றன. மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதியில் பூண்டு சாகுபடியில் அதிக மகசூல் பெற்றுள்ளது. இதனால் தஞ்சை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மார்க்கெட்டிற்கும் பூண்டு  விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. 

தஞ்சாவூரில் கடந்த சில நாட்களாக நாட்டு பூண்டு ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாட்டுப் பூண்டின் விலை அதிகம் இருப்பதால் பொதுமக்கள் மலைப்பூண்டை வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ மலை பூண்டு ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த மாதம் மலை பூண்டின் விலை அதிகமாக காணப்பட்டது. இதனால் பூண்டு வாங்குவதற்கே மக்கள் அச்சப்பட்டதுடன், குறைவாகவே வாங்கி சென்றனர். தற்போது நாங்கள் தேனி ,கம்பம், குமுளி போன்ற பகுதிகளிலிருந்து மலை பூண்டை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம்.  நாட்டு பூண்டின் விலை அதிகம் இருப்பதால் கடைக்காரர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் எங்களிடம் மலைப்பூண்டு வாங்கி செல்கின்றனர். மேலும் சில்லறை கடைக்காரர்களும் பூண்டு விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், நாட்டுப்பூண்டும் சரி, மலைப்பூண்டும் சரி தற்போது அதிக விலையில்தான் விற்கப்படுகிறது இருந்தாலும் நாட்டுப்பூண்டை விட மலைப்பூண்டு விலை குறைவாக உள்ளது. பூண்டு உணவில் சுவையும், மணமும் சேர்ப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி பூண்டில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதால் சளி, இருமல் காய்ச்சல் நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்துதல் ஆகிய பல காரணங்களுக்காகவும் பலவகையான உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. அதனால் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கி செல்கிறோம் என்றனர்.

பூண்டுகளில் பல வகைகள் உள்ளன. தாவரங்கள் அல்லது காய்கறிகள் வளரும் இடத்தில் இருக்கும் தன்மைக்கு ஏற்ப அதிக மருத்துவ குணங்களையும், ஊட்டச் சத்துக்களையும் கொண்டிருக்கும். பல்வேறு வகையான பூண்டுகளுக்கும் இது பொருந்தும். பிளாக் கார்லிக் எனப்படும் கருப்பு நிறத்தில் இருக்கும் பூண்டு மற்றும் மலைப்பூண்டு அதிகமான மருத்துவ குணங்களை கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல, இமாலய மலைத் தொடரின் விளையும் பிரத்யேகமான பூண்டு நாம் வழக்கமாக பயன்படுத்தக்கூடிய பூண்டு வகைகளை விட அதிகமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

கொலஸ்டிரால் அளவைக் குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது : பொதுவாகவே காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கும். இமாலயன் பூண்டில் உள்ள மருத்துவ பண்புகள் அதிக அளவு கொலஸ்ட்ராலையும் நிர்வகிக்க உதவும். டு உணவில் சுவையும், மணமும் சேர்ப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி பூண்டில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதால் சளி, இருமல் காய்ச்சல் நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்துதல் ஆகிய பல காரணங்களுக்காகவும் பலவகையான உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Embed widget