Thiruvayaru : கொட்டித்தீர்த்த மழை..வீணான 15000 ஏக்கர் பயிர்கள் ! கண்ணீரில் விவசாயிகள்..
TN Rains: திருவையார் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணாமாக 15000 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே திருப்பழனம் உட்பட சுற்றுப்பகுதி கிராமங்களில் தற்போதைய தொடர் கனமழையால் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் இளம் நடவு சம்பா, தாளடி நெற்பயிர்கள் முழுவதும் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு நிலை:
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக தஞ்சை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த இந்த மழையால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. கடந்த வாரத்தில் பெய்த மழையால் பயிர்கள் பாதித்து சற்றே தப்பிய நிலையில் தற்போதைய மழையால் முழுமையாக மூழ்கி உள்ளது. தண்ணீர் வடிய வழியில்லாததால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: Ajithkumar: எத்தனை வருஷம் ஆச்சு இப்டி பாத்து! அமர்க்களம் அஜித்தை அப்படியே கொண்டு வந்த ஆதிக்!
நீரில் மூழ்கிய 15000 ஏக்கர் பயிர்கள்:
இந்நிலையில் திருவையாறு அருகே திருப்பழனம், சிறு புலியூர், ராயன்பேட்டை, கார்குடி, பருத்திகுடி, திங்களூர், 70.பெரமூர், தென்னஞ்சேரி, குண்டக்குடி, ஆச்சனூர் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் இளம் சம்பா, தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இப்பகுதியில் பெய்த கனமழையால் மழைநீர் வயல்களில் தேங்கியுள்ளது. சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நெல்பயிர்கள் முழுவதும் முழ்கி கடல்போல் காட்சியளிக்கிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட நெல் வயல்களை தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எஸ்.முகமது இப்ராஹிம், மாநில துணை அமைப்பாளர் ஜீவானந்தம், திருப்பழனம் ஊராட்சித் தலைவர் பிரபாகரன், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க சிறுபுலியூர் கிளை தலைவர். சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: Thanjavur : தூர்வாரப்படாத ஏரிகள்.. நீரில் மூழ்கிய பயிர்கள்! வேதனையில் விவசாயிகள்..
நிர்வாணம் வேண்டி கோரிக்கை:
பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை மாவட்ட கலெக்டர், வேளாண்மை துறை இணை இயக்குநர், உதவி இயக்குனர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை அரசிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.