மேலும் அறிய
மதுரையில் பழிக்குப்பழி மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது !
மாநகரில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் வழிப்பறி மேற்கொள்வதற்காக ஆயுதங்களோடு சுற்றி திரிந்தவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோப்புப்படம்
Source : ABPLIVE AI
மதுரை மாநகரில் பழிக்குப்பழி கொலை மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றிதிரிந்த 7 பேர் கைது, வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாநகரில் வாள்களுடன் சுற்றித் திரியும் குற்றப் பிண்ணனியாளர்களால் பொதுமக்கள் அச்சம்.
பழிக்குப்பழி கொலை
மதுரை மாநகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பழிக்குப்பழி கொலை செய்யும் திட்டத்துடனும், வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நோக்கத்தோடு கையில் கத்தி, வாள்களுடன், சுற்றித்திரிந்த மதுரையை சேர்ந்த கார்த்திக் (19), ரகுமான்கான் (29), தினேஷ்வரன் (23), ராம்குமார் (36), மகாராஜன்(25), ராஜ்குமார் (23), கரண் (24) ஆகி்ய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பழிக்குப் பழியாக கொலை செய்வதற்காக, மது அருந்த, முந்தைய வழக்குகளிற்கான செலவிற்காக பணப் பறிப்பில் ஈடுபட திட்டமிட்ட நிலையில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் கைது
மதுரை மாநகர காவல் ஆணையர் எல்கைக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த்புரம், திடீர்நகர், சுப்பிரமணியபுரம், எஸ்.எஸ்.காலனி செல்லூர் ஆகிய காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றப்பிண்ணனியில் உள்ளவர்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் அதிகளவிற்கு இளைஞர்களே ஆயுதங்களுடன் சுற்றித்திரித்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் மதுரை மாநகர பகுதிகளில் கொலைக்கான திட்டமிடலோடு சுற்றித்திரிந்து கைதாகியுள்ளனர்.
ஆயுதங்களோடு சுற்றி திரிந்தவர்கள் கைது
மேலும் மாநகரில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் வழிப்பறி மேற்கொள்வதற்காக ஆயுதங்களோடு சுற்றி திரிந்தவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாநகர கவால்துறை சார்பில் காவல்துறையினர் மேற்கொள்ளும் தீவிர வாகன சோதனையின் போதும், ரோந்து பணிகளின் போதும் இதுபோன்ற பின்புல குற்றவாளிகள் கைது செய்யப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுபோன்ற குற்றப் பிண்ணனி உள்ளவர்களை தீவிரமாக காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‘எப்படி ப்ரொபோஸ் செய்து பெண்களை கவர்வது’ - சீயான் விக்ரம் சொன்ன பதில் என்ன?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Thiruparankunram: கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்; சில மனிதர்கள் சரியாக இல்லை - நீதிபதிகள் கருத்து
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion