மேலும் அறிய

Ajithkumar: எத்தனை வருஷம் ஆச்சு இப்டி பாத்து! அமர்க்களம் அஜித்தை அப்படியே கொண்டு வந்த ஆதிக்!

அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அஜித் மிகவும் உடல் எடை குறைந்து மெலிந்த தோற்றத்தில் காணும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் விடாமுயற்சி படம் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வந்த நிலையில், விடாமுயற்சி படம் அடுத்தாண்டு பொங்கல் விருந்தாக  வெளியாக உள்ளது. விடாமுயற்சி படம் நடித்துக் கொண்டிருந்தபோதே அஜித்குமார் குட் பேட் அக்லி படத்தில் ஒப்பந்தம் ஆனார்.

குட் பேட் அக்லி ஷூட்டிங் ஓவர்:

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் என ஒவ்வொன்றும் ரிலீசாகும்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.  விடாமுயற்சி படத்தை காட்டிலும் குட் பேட் அக்லி படத்திற்கே அதிகளவு எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்திற்காக அஜித்தின் கெட்டப், போட்டோஸ் இணையத்தில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பதிவிட்டுள்ளார்.  மேலும், படப்பிடிப்பு தளத்தில் அஜித்தும், சுனிலும் பேசும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அமர்க்களம் தோற்றத்தில் அஜித்:

அஜித் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் எடை கூடி குண்டான தோற்றத்திலே காட்சி தந்து வந்தார். ஆனால், சமீபகாலாக மிகவும் உடல் எடை குறைந்து மெலிந்த தோற்றத்தில் காட்சி தந்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் நேற்று பகிர்ந்துள்ள படத்தில் அமர்க்களம் படத்தில் பார்த்த அஜித்போலவே அவர் இருப்பது, அவரது ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1999ம் ஆண்டு வெளியான அமர்க்களம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அந்த படத்தில் அஜித்தின் கெட்டப் மிகவும் பிரபலம். சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு அதே தோற்றத்தில் அஜித் இருப்பது ரசிகர்களை மிகுந்த உற்சாகம் ஆக்கியுள்ளது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

எப்போது ரிலீஸ்?

குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. முதலில் பொங்கல் வெளியீடாக குட் பேட் அக்லி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜித்துடன் பிரசன்னா, பிரபு, அர்ஜூன் தாஸ், ராகுல் தேவ், யோகிபாபு, தெலுங்கு திரை பிரபலம் சுனில் நடிக்கின்றனர். கேங்ஸ்டர் படமாக உருவாகும் இந்த படம் நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர்  படமாக உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் இணைந்து குட் பேட் அக்லி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget