Top 10 News: இன்று தொடங்குகிறது சென்னை சங்கமம், ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார் - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

புகை சூழ்ந்த சென்னை
போகிப்பண்டிகை காரணமாக சென்னையில் பல இடங்களில் விதிகளை மீறி, பிளாஸ்டிக் பொருட்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதனால், மார்கழி பனிமூட்டத்துடன் போகிப் பண்டிகையால் புகை மூட்டமும் நிலவியது. பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
”சென்னை சங்கமம்” இன்று தொடக்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலய திடலில் ‘சென்னை சங்கமம்' திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன
பட்டாபிராம் வரை மெட்ரோ திட்டம்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில், கோயம்பேடு - ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை |நீட்டிக்க திட்டம். இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக மெட்ரோயில் நிர்வாகம் தகவல். பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் சீரமைப்பு நீளம் சுமார் 20 கி.மீ. ஆக அதிகரிக்கும். இதற்கு ரூ.6,500 கோடி வரை கட்டுமானச் செலவாகலாம் என கணிப்பு. கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை ஜனவரி இறுதிக்குள் தயாராகும் என தெரிவிப்பு
6.4 லட்சம் பேர் பயணம்:
கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். 11 ஆயிரத்து 463 பேருந்துகளில் அவர்கள் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக தனியார் பேருந்துகள், சொந்த வாகனங்கள், ரயில் மற்றும் விமானங்களிலும் ஏராளமானோர், பொங்கல் விழாவை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
ஸ்பேடெக்ஸ் - இறுதிகட்ட ஒருங்கிணைப்பு பணிகளில் இஸ்ரோ தீவிரம்!
விண்வெளியில் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு. தற்போது, இரு ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் 3 மீட்டர் இடைவெளியில் மிக நெருக்கமாக கொண்டுவரப்பட்டு அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவை இணைக்கப்பட உள்ளன
சபரிமலையில் நாளை மகரஜோதி - ஏற்பாடுகள் தீவிரம்
சபரிமலையில் நாளை நடைபெறும் மகரஜோதி தரிசனத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரம். கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம். இன்றும், நாளையும் ஆன்லைலில் புக் செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி. நாளை காலை 7 மணியிலிருந்து நிலக்கல்லில் இருந்து போக்குவரத்து கட்டுப்பாடு விதிப்பு. காலை 10 மணி வரை மட்டுமே பம்பை வரை போக்குவரத்து இயக்கம், 12 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை.
"ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்" -சுகேஷ் சந்திரசேகர்
பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் ரூ7,640 கோடி வரி செலுத்தத் தயாராக இருப்பதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம். அமெரிக்காவில், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்கள் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.22,410 கோடி ஈட்டியிருப்பதால், இந்த வருவாயை இந்திய வரி கட்டமைப்புக்குள் கொண்டுவர விரும்புவதாக சிறையில் இருந்து தனது வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்
கனடா பிரதமர் போட்டி - அனிதா ஆனந்த் விலகல்
கனடா பிரதமர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என, இந்திய வம்சாவளியான அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். தற்போது போக்குவரத்து அமைச்சராக உள்ள அவர், அடுத்த தேர்தலில் எம்.பி., பதவிக்கு கூட போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். மீண்டும் பேராசிரியர் பணிக்கு செல்ல இருப்பதாகவும் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பலி எண்ணிக்கை உயர்வு
லாஸ் ஏஞ்சல்ஸில் கட்டுக்கடங்காமல் எரிந்து வடும் காட்டுத் தீயால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. 12 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டுமானங்கள் எரிந்து நாசமாகியுள்ள நிலையில், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிசிசிஐ பொதுச்செயலாளர் தேர்வு
பிசிசிஐ பொதுச்செயலாளராக தேவஜித் சைகியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெய் ஷா கடந்த மாதம் ஐசிசி பொதுச்செயலாளர் ஆனதை தொடர்ந்து, பிசிசிஐ பொதுச்செயலாளர் பதவி காலியானது குறிப்பிடத்தக்கது. பிரப்தேஜ் சிங் பாட்டியாவும் பிசிசிஐ பொருளாளராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

