Watch video: மெரினாவில் பள்ளி மாணவிகளுடன் செல்ஃபி எடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்..! வைரல் வீடியோ
அத்துடன், அலங்கார ஊர்தியை பார்வையிட வந்த ஒரு பெற்றோரின் குழந்தையிடமும் முதலமைச்சர் கொஞ்சி விளையாடினார். குழந்தைக்கு சாக்லேட் கொடுத்தும் மகிழ்ந்தார்.
சென்னை மெரினாவில் குடியரசு தின அலங்கார ஊர்திகளை பார்வையிட்ட மாணவிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தார். இதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகை தருகின்றன. அந்த வகையில், சென்னையில் நேற்று முதல் 3 அலங்கார ஊர்திகள் பொதுமக்களின் பார்வைக்காக மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அலங்கார ஊர்திகளை வரும் 23ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மெரினாவில் உள்ள இந்த அலங்கார ஊர்திகளை பள்ளி மாணவிகள் சிலர் பார்வையிட்டனர். அப்போது, அங்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகளுடன் முதலமைச்சர் செல்ஃபி எடுத்துக்கொண்டார். முதலமைச்சர் ஸ்டாலினே இந்த செல்ஃபியை எடுத்துக்கொண்டு மகிழ்ந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அத்துடன், அலங்கார ஊர்தியை பார்வையிட வந்த ஒரு பெற்றோரின் குழந்தையிடமும் முதலமைச்சர் கொஞ்சி விளையாடினார். குழந்தைக்கு சாக்லேட் கொடுத்தும் மகிழ்ந்தார்.
மேலும், இந்த வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், ‘குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது.மெரினாவில் ஊர்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடு வெல்லும்!’ எனப் பதிவிட்டுள்ளார்.
வீடியோ:
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்