மத்திய அரசுக்கு ஒகே.. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டியால் எவ்வளவு வருவாய் வருகிறது என தெரியுமா?
மத்திய அரசின் வருவாய்களில் முதன்மை ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படும் ஜிஎஸ்டியில் இருந்து தமிழக அரசுக்கு எவ்வளவு செல்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
![மத்திய அரசுக்கு ஒகே.. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டியால் எவ்வளவு வருவாய் வருகிறது என தெரியுமா? Tamil Nadu gets 31338 crore rupees as revenue from Goods and Services Tax this year மத்திய அரசுக்கு ஒகே.. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டியால் எவ்வளவு வருவாய் வருகிறது என தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/12/0e922495ee1541da88ae426c8b5afe531726149527586729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து வருவாயாக இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் 31,338 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
ஜிஎஸ்டி வரி வருவாய்: கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம், சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. எட்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.டியே மத்திய அரசின் வருவாய்க்கான முதன்மை ஆதாரமாக உள்ளது. ஜிஎஸ்டி வரி வருவாயை மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறது.
மாநிலங்களின் கரத்தை வலுப்படுத்த மூலதனம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுவதற்காக இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து எவ்வளவு வருவாய் கிடைக்கிறது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தலைமையில் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன்குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டுக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கிறது? இக்கூட்டத்தில் வணிகவரி ஆய்வு குழு பிரிவில் சிறப்பாக பணியாற்றி அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தந்தமைக்காக கூடுதல் ஆணையர் ஞானக்குமார் மற்றும் குழுவினர்க்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பாராட்டுச் சான்றிதழ் வாழங்கினார்கள்.
வணிகவரித்துறையின் மொத்த வரி வருவாய் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரூ.55,807 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு ஆகஸ்ட் 2023 மாதம் வரை வசூல் செய்யப்பட்ட ரூ.49,716 கோடியுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ரூ.6091 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி வசூல் பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரூ.31,338 கோடி வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் 2023 மாதம் வரை வசூல் செய்யப்பட்ட ரூ.26,767 கோடியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வரி வருவாய் 17 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)