மேலும் அறிய

TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்

kalaignar kanavu illam scheme: கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு கூடுதலாக ரூ.400 கோடி ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

kalaignar kanavu illam scheme: கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு ஏற்கனவே, ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரூ.400 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் ஏறத்தாழ 8 இலட்சம் குடிசை வீடுகள் உள்ளதாக "அனைவருக்கும் வீடு" என்ற கணக்கெடுப்பின் வழியாக கண்டறியப்பட்டதன் அடிப்படையில் "குடிசையில்லா தமிழ்நாடு" என்ற இலக்கினை அடையும் பொருட்டு, எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் 6 வருடங்களில் 8 இலட்சம் வீடுகள் புதியதாக கட்டித்தர அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி நடப்பு நிதியாண்டில் (2024-25) ஒரு இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் பரப்பளவு, சமையலறை உட்பட, 360 சதுர அடியாகும். பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் TANCEM சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, துறை மூலம் வழங்கப்படுகிறது.

வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பின் என நான்கு தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் (Single Nodal Account-SNA) மூலம் தொகை நேரடியாக பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்நாடு அரசால் ரூ.1051.34 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு. பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.860.31 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு (Steel) என ரூ.135.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.995.61 கோடி இதுவரை கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகளும் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு மேலும் ரூ.400 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது. தற்போது வரப்பெற்றுள்ள ரூ.400 கோடியும் சேர்ந்து மொத்தம் ரூ.1451.34 கோடி பெறப்பட்டு கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிதியாண்டிற்குள் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தமிழ்நாடு அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
ரூ.20 ஆயிரம்… மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!
ரூ.20 ஆயிரம்… மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!
Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat RatnaRahul Gandhi | எகிறி அடிக்கும் திமுக! SILENT MODE-ல் காங்கிரஸ்! வாயை திறப்பாரா ராகுல்? | MK StalinNayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
ரூ.20 ஆயிரம்… மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!
ரூ.20 ஆயிரம்… மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!
Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!
அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்...
அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்...
North Korea: எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...
எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...
Weight Loss Drug: இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு..! எடையை குறைக்க புதிய மருந்து -  விலை, எப்படி வேலை செய்யும்?
Weight Loss Drug: இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு..! எடையை குறைக்க புதிய மருந்து - விலை, எப்படி வேலை செய்யும்?
Chennai Encounter: நேற்று கடலூர், இன்று சென்னையில் துப்பாக்கிச் சூடு - ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்
Chennai Encounter: நேற்று கடலூர், இன்று சென்னையில் துப்பாக்கிச் சூடு - ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்
Embed widget