மேலும் அறிய

Senthil Balaji Bail: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? தீர்ப்பு ஒத்திவைப்பு

வரும் 20ஆம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது லஞ்சம் பெற்றதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,  சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14ஆம் தேதி, அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

அதேநேரம், உடல்நலக்குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கு மாற்றம் & ஜாமீன் மனு:

தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த மாதம் 14ம் தேதி மாற்றப்பட்டது. அங்கு அமைச்சர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், அதனை யார் விசாரிப்பது என்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே மாறுபட்ட கருத்து நிலவியது.

உயர்நீதிமன்றம் உத்தரவு:

இதன் காரணமாக தனது ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் ”அமைச்சரின் வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு எனவும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களாக இருந்தாலும், அந்த வழக்குகளை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளதாக” உத்தரவிட்டது. 

உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் என்.ஆர்.இளங்கோ வாதம் முன்வைத்தனர். சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமோ சாட்சிகளோ இல்லை என்றும் பாஜகவின் அழுத்தம் காரணமாகவே உள்நோக்கத்துடன் கைது நடந்ததாக செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் புரிந்ததற்கான மின்னனு ஆதாரங்கள் உள்ளதாக அமலாக்கத்துறை வாதிட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார். வரும் 20ஆம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க: Mark Antony Review: விஷாலை ஓரம் கட்டிய எஸ்.ஜே.சூர்யா.. கொண்டாட வைத்ததா “மார்க் ஆண்டனி” படம்?.. முழு விமர்சனம் இதோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NTK - TVK Alliance? :  “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
NTK - TVK Alliance? : “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’  செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்!  ஷாக்கான திமுகவினர்
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்
Hydrogen Train:  வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Hydrogen Train: வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Sunitha Williams Return: சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK - TVK Alliance? :  “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
NTK - TVK Alliance? : “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’  செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்!  ஷாக்கான திமுகவினர்
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்
Hydrogen Train:  வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Hydrogen Train: வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Sunitha Williams Return: சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
Coolie Movie Update: சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ்.. கூலி படத்தோட லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா.?
சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ்.. கூலி படத்தோட லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா.?
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
Bandhipur accident:செயலிழந்த பிரேக்.. தறிக்கெட்டு ஓடிய லாரி! அடுத்து நடந்தது என்ன?
Bandhipur accident:செயலிழந்த பிரேக்.. தறிக்கெட்டு ஓடிய லாரி! அடுத்து நடந்தது என்ன?
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
Embed widget